எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரத்து?
வீட்டு வேலையாட்களுக்கு ரேஷன் கார்டுகள்
இனி ரத்தாகும் அபாயம்

ரேஷன் பொருட்கள் வாங்காமல், வீட்டு வேலையாட்களையும், உறவினர்களையும், அவற்றை வாங்கிக் கொள்ள அனுமதிப்போரின், ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய, உணவுத்துறை முடிவு செய்துள்ளது.

ரேஷன் கார்டுகள்,  ரத்து,  அபாயம்


தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை, மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. மொத்தம் உள்ள, 2.03 கோடி ரேஷன் கார்டுதாரர்களில், எந்த பொருளும் வாங்காத, 50 ஆயிரம் பேர் தவிர, மற்றவர்களுக்கு, மேற்கண்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக, தமிழக அரசு, ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது. வசதி படைத்தவர்கள், ரேஷனில், அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில்லை.

அவர்கள், தங்களின் கார்டுகளை, வீட்டில் வேலை செய்பவர்கள், உறவினர்கள் உட்பட, வேறு நபர்களிடம் வழங்கி, ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளும்படி கூறுகின்றனர். அந்த நபர்கள், ஏற்கனவே தங்களுக்கு உரிய கார்டில், பொருட்களை வாங்குகின்றனர். இதனால், அடுத்தவர் கார்டுகள் வாயிலாக கிடைக்கும் உபரி பொருட்களை, மளிகை கடை, ஓட்டல்களில் விற்பனை செய்கின்றனர்.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் முறைகேடுகளை தடுக்க, 'ஆதார்' எண் அடிப்படையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. இருப்பினும், தவறுகள் முழுவதுமாக குறையவில்லை. இதற்கு, வசதியானவர்கள், பொருட்களை வாங்காமல், அடுத்தவர்களிடம் வாங்கி கொள்ளும்படி கூறுவதே, முக்கியகாரணம்.

பொருட்கள் வாங்க விரும்பாதவர்கள், அதை, பொது வினியோக திட்ட இணையதளம் வாயிலாக, அரசுக்கு விட்டு கொடுக்கும் வசதியும் உள்ளது.

Advertisement

யாரும் அதை பயன்படுத்துவதில்லை.விரல் ரேகை பதிவு செய்து, பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

எனவே, வேறு நபர்களிடம், கார்டுகளை கொடுத்து, பொருட்கள் வாங்க கூறுவோரின் கார்டுகளை கண்டறிந்து, தொடர்ந்து பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு, அவை ரத்து செய்யப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தேர்தல் முடிவுக்கு பின் வெளியிடப்படும். இதனால், ரேஷன் பொருட்களை தேவைப்படுவோர் மட்டுமே, வாங்கும் நிலை ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - CHENNAI,இந்தியா
24-மே-201912:27:51 IST Report Abuse

mohanபொலிடீஸிங் ல இருந்து போலீஸ் வரை கும் கோடி கொடிய கொள்ளை அடிக்கிறாங்க அதெல்லாம் கேக்க துப்பு இலை. பாவம் எஅதோ ஏழை கல் பொழப்புழா மண் அள்ளிப்போடறஞ பாவி அரசாங்கம்

Rate this:
skv - Bangalore,இந்தியா
20-மே-201914:40:46 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>வசதியுள்ளவா சூப்பர்மார்கெட்லேயே வாங்கிக்குறாங்க வீட்டுவேலை செய்யும் பலர் மூட்டையா அரிசி வாங்குறாங்க இப்போதெல்லாம் அவர்களுக்கு ஒரு வீட்டுலே மூவாயிரம் கூட கிடைக்குது (அவா ஒரு வேலைக்கு ஆயிரம் என்று ரெட் பேசறாங்க தெரியுமா )தப்பே இல்லீங்க எம் என் சி லே வேலை என்றால் லக்ஷம்போல வாங்குறாளே அவா தாராளமா கொடுக்குறாங்க என்பது உண்மை சில பெண்கள் ஒரு பிளாட் வாடகைக்கு எடுத்துண்டு ஷேர் பண்ணிண்டு சம்பளம் தரங்க வரும் மைட்ஸ் காலே சமையலும் செய்துட்டு போறாங்க பிகாஸ் அவா வேலைகள் அவ்விதம் இருக்கே அப்படி செய்யும் மைட்ஸ் குசிலர் 5000/கூட THARAANGKALE, அஞ்சி பேரா தங்கினால் தலைக்கு ஆயிரம் தானே வரும் பென்சன் வாங்கிண்டு இருக்கும் வீடுகள்லேயும் மைட்ஸ் இதுபோல எதிர்பாக்குறாங்க அதுதான் கொடுமை ஜாயின் குடும்பம்னால் ஓகே ரெண்டு பெரு இருக்க அவளிடம் அஞ்சாயிரம்னா எங்கேபோவாங்க இதுனாலே பல கிழவர்கள் முதியோர் இல்லமக்கேபோயிற்றாங்க SEFETY அண்ட் செக்யூரிட்டி என்று

Rate this:
Sivagiri - chennai,இந்தியா
16-மே-201914:43:29 IST Report Abuse

Sivagiriஎல்லா ஸ்மார்ட் கார்டுகளின் ஜெராக்ஸ் காப்பியும் கடைக்காரன் கையில் இருக்கு . . . அதை ஸ்கேன் பண்ணி சரக்கு வாங்காத கார்டுகளின் சரக்குகளை ஆட்டைய போட்டுடறாய்ங்க . . . இந்த வசதி படைச்சவய்ங்க கார்டுகளை அவிங்க வாங்காம வேலைகாரங்ககிட்ட கொடுத்து வாங்கிக்க சொல்றாய்ங்க - அது கடைக்காரனுக்கு - அதாவது பிடிஎஸ் டிபார்ட்மென்டுக்கு பெரிய நஷ்டம் ஆயிருது . . . அதுதான் ஐடியா பண்ராய்ங்க - ஒண்ணு நீ வாங்கு - இல்ல என்கிட்ட குடுத்துட்டு போ .. . அத வுட்டுட்டு வேலைகாரங்களுக்கு கொடுத்தா எப்பிடி ? . . . அதான் . . . நீ வந்து வாங்கலேன்னா யாருக்கும் கிடைக்க கூடாது . . . அதுதான் ரேஷன்கடைக்காரன் பிளான் . . . அதாவது பிடிஎஸ் டிபார்ட்மென்ட் பிளான் . . . பிளான் பண்ணி அடிக்கிறாய்ங்க . . .

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X