தேசிய நெடுஞ்சாலையில் மோடி சகோதரர் மறியல்

Added : மே 16, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 தேசிய நெடுஞ்சாலையில் மோடி சகோதரர் மறியல்

ஜெய்ப்பூர்:பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர், ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், மறியல் போராட்டம் நடத்தினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர், அசோக் கெலாட் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர், பிரகலாத் தாமோதரதாஸ் மோடி, ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வருகிறார்.ராஜஸ்தான் மாநில அரசு, இவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கிஉள்ளது. இரண்டு போலீசார், பிரகலாத்தின் பாதுகாப்பு பணியை கவனிக்கின்றனர்.
நேற்று முன்தினம் மாலை, பிரகலாத் மோடி, உதய்ப்பூரில் இருந்து, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு வந்தார். ஜெய்ப்பூர் - அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பக்ரு போலீஸ் ஸ்டேஷனில், பிரகலாத்தின் பாதுகாப்பு போலீசார் இருவர் காத்திருந்தனர்.பக்ரு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த பிரகலாத், பாதுகாப்பு போலீசாரை, தனி வாகனத்தில் அனுப்பி வைக்கும்படி கூறினார்.

ஆனால், தனி வாகனம் அளிக்க, ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனர், ஆனந்த் ஸ்ரீவத்ஸவா மறுத்து விட்டார். பிரகலாத்தின் வாகனத்திலேயே, போலீசாரையும் ஏற்றிச் செல்லும்படி கூறினார். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில், பக்ரு போலீஸ் ஸ்டேஷன் வாசலில், பிரகலாத் மோடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, மறியல் நீடித்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் பின், போலீஸ் கமிஷனர் ஸ்ரீவத்ஸவா, விதிமுறைப்படி பாதுகாவலர்களுக்கு தனி வாகனம் அளிக்க முடியாது என்பதை சுட்டிக் காட்டினார். சமாதானம் அடைந்த பிரகலாத் மோடி, போலீசாரை, தன் வாகனத்திலேயே ஏற்றிச் சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விமர்சகன் - kovai,இந்தியா
25-மே-201910:21:12 IST Report Abuse
விமர்சகன் இது சகஜம் தான் இது போன்று வரும் காலங்களில் இன்னும் நிறைய நடக்கும் ஆனால் ஒரு வித்தியாசம் இப்போது ஊடகங்களில் வைரல் ஆனது போல் வரும் காலங்களில் அது நடக்காது அப்படியே மறைக்கப்பட்டுவிடும் அதுதான் உண்மை
Rate this:
Share this comment
Cancel
பொன் வண்ணன் - chennai,இந்தியா
21-மே-201915:12:42 IST Report Abuse
பொன் வண்ணன் அடேங்கப்பா......
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
17-மே-201920:30:18 IST Report Abuse
தாமரை இது தேவையில்லாதது. மோடி பெயருக்கு களங்கத்தை உண்டுபண்ணுவது.மோடி உடனடியாக இதை சரிசெய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X