அரசியல் செய்தி

தமிழ்நாடு

நான் யாருக்கு விரோதி என மக்களுக்கு தெரியும்

Updated : மே 16, 2019 | Added : மே 16, 2019 | கருத்துகள் (121)
Advertisement
நான் யாருக்கு விரோதி என மக்களுக்கு தெரியும்

திருப்பரங்குன்றம்,:''ஹிந்து விரோதி என கூறி விளையாட்டு காட்டாதீர். நான் யாருக்கு விரோதி என மக்களுக்கு தெரியும்.'', மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேசினார்.




திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் சக்தி வேலை ஆதரித்து கமல் தோப்பூர், மேல அனுப்பானடி, வில்லாபுரத்தில் பிரசாரம் செய்தார். பின் திருப்பரங்குன்றம் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்த கூட்டத்தை பார்த்து பொய்யாக கட்சி வளர்ப்பவர்களுக்கு வயிறு எரியும். எங்கள் கூட்டத்திற்கு தாய்மார்கள் குழந்தைகளுடன் வருகிறார்கள். கூட்டம் முடிந்த பின் தொண்டர்கள் குப்பைகளை அகற்றுகிறார்கள். இது போல அரசியலிலும் குப்பைகளை அகற்றுவோம்.ஹிந்து விரோதி என்று கூறி விளையாட்டு காட்டாதீர். நான் யாருக்கு விரோதி என மக்களுக்கு தெரியும். காந்தியாக மாற நினைப்பவர்களில் நானும் ஒருவன். எனக்கு தேச பக்தி கற்றுத்தர உங்களுக்கு தகுதி இல்லை. 1967ல் காலத்தின் காட்டாயத்தால் இரு கட்சிகளை கொண்டு வந்தோம். தற்போது அதை அகற்றும் நிலையில் உள்ளோம். மக்களிடம் இருந்து என்னை பிரிக்க நினைத்தால் மரியாதை கெட்டு விடும். '' என்றார்.


கூட்டத்தில் செருப்பு வீச்சு


திருப்பரங்குன்றம் பிரசார கூட்டத்தில் கமல் பேசுகையில் மேடை அருகே இருந்த தெருவுக்குள் இருந்து அனுமன் சேனா அமைப்பை சேர்ந்த 11 பேர் 'பாரத் மாதா கீ ஜே' என கோஷமிட்டபடி வந்தனர். அதில், ஒருவர் கமலை நோக்கி செருப்பை வீசினார். ஆனால் அது கூட்டத்திற்குள் விழுந்தது. போலீசார் அவர்களை அழைத்துச் சென்று விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (121)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
16-மே-201917:50:00 IST Report Abuse
krish கமல் ஹாசரே, 1967 இல் தோன்றிய கட்சிகளை அகற்ற, உனக்கு அப்பாவி ஆன்மிக புனித இந்து மதம் தான் கைத்தடியா? தப்பி தவறி இந்துவாக பிறந்து, அர்த்தமுள்ள இந்துமதத்தின் குணாதிசயங்களையும், கோட்பாடுகளையும் நீ அறிந்துதான் இப்படி உளறி கொட்டுகிறாயா?.... தனி மனிதன் தவறான செயல்களுக்கு, அவன் பிறந்த மதத்தை அடையாளம் கட்டுவது அறிவீனம் என்று நீ அறியாயோ? நீ போற்றும் அல்லாவும், கர்த்தரும் உன்னை மன்னிப்பாராக... ஏனினில், அவர்கள் மனிதர்களை பிரிப்பதற்காக, உன்னை போல் அல்லாமல், தங்கள் சுய லாபங்களுக்காக மதங்களை தோற்றுவிக்கவில்லை என்பதே என் சிறு அறிவுக்கு எட்டிய விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
16-மே-201916:15:19 IST Report Abuse
Iyappan Jayaram காங்கிரசின் கை கூலி கமல்ஹாசன் அவர்கள் சம்பாதித்த காசை எல்லாம் சினிமாவிலே விட்டு விட்டார் பிறகு எப்படி கட்சி கூட்டம்.,மாநாடு நடத்த பணம் ஒவ்வொரு சேனல்,மற்றும் அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் இதுக்கெல்லாம் மாநிலம் முழுவதும் செய்யும் செலவு என்றால் சாதாரண விஷயம் அல்ல பிரச்சாரம் செய்யும் இடங்களில்எல்லாம் 1980-ல் உருவான பேரியக்கத்தை அழிப்போம் என்றே கூறி வருகிறார் நம் தமிழ் நாட்டில் இந்து ஐதீகத்தை இந்து கடவுளை திட்டினால் இழிவாக பேசினால் நம் தமிழ்மக்களுக்கு பேசியவர் தியாகி ஆகி விடுகிறார் ஆனால் அவ்வாறு நினைத்த காலம் சென்றுவிட்டது அதுவும் பி ஜே பி வந்த பிறகு.ஆனால் அந்த விவரம் தெரியாமல் பேசி மாட்டிக்கொண்டு முழிக்கிறார் ஒழுக்கம் இல்லாத சினிமா பீல்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே உயர் மட்ட தலைவர்களாக பதவிகொடுத்து அழுகு பார்க்கும் கமல்கட்சியை ஆரம்பத்திலேயே ஒரம்கட்டுவோம் ஜெய்ஹிந்த் எனச்சொல்லி விடைபெற்றுக் கொள்கிறேன் ஒவ்வொரு மதமும் அவ்வங்களுக்கு அம்மா அப்பா மாதிரி ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னோட அப்பா அம்மா உயர்வு ஒரு குழந்தையின் அம்மா அப்பாவை இன்னொரு குழந்தையின் அம்மா அப்பாவோடு ஒப்பிடக்கூடாது அதுபோல்தான் மதமும் ஆனால் இவர்கள் ஓட்டுக்காக தன் தாயை மோசம் என கூறி இருப்பதாவது படு கேவலமான விஷயம் ஒவ்வொரு மதத்திலும் ஒரு கொலைகாரன் இருப்பான்
Rate this:
Share this comment
Cancel
16-மே-201915:25:02 IST Report Abuse
Ganesan Madurai குடும்பமே இல்லாத சேர்ந்து வாழும் வாழ்க்கையை கொண்ட உனக்கு எங்களுக்கு காந்தி பற்றி இந்துமதத்தை பற்றி சொல்லத்தரும் தகுதி இல்லை. வாக்காளர்களை ரவுடித்தனம் காட்டி மிரட்டி ஓட்டுவாங்க நினைத்து நீ மண்ணைக்கவ்வும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X