சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகாசியில் கன மழை

Added : மே 16, 2019
Advertisement

சிவகாசி:சிவகாசியில் இடி, மின்னலுடன் பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. சிவகாசியில் தினமும் வெயில் கொளுத்தி வந்தது. நேற்று மாலை 4:50 மணிக்கு சிவகாசி பகுதியில் மழை பெய்ய துவங்கியது. 6:00 மணி வரை நீடித்தது. இதனால் நகரின் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது. சிவகாசி பகுதியில் சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.நகரில் வாறுகால் முறையாக துார்வாரததால் சாக்கடை நீரோடு மழைநீரும் சேர்ந்து ரோட்டில் ஓடியது. சாக்கடை நீர் ரோட்டிற்கு வந்ததால் துர்நாற்றம் ஏற்பட்டதோடு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X