இந்தியா

கலவர ஜெஹானாபாத் நிலவரம் என்ன?

Updated : மே 16, 2019 | Added : மே 16, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
பீஹாரின் கொலைக்களம் என, எந்த பகுதிக்காவது பட்டம் அளிக்க வேண்டுமானால், ஜெஹானாபாதிற்கு தாராளமாக வழங்கலாம். அந்த அளவுக்கு, இந்தப் பகுதி, இரு ஜாதியினருக்கு இடையேயான வன்முறை களமாக விளங்குகிறது.ரன்வீர் சேனா எனப்படும் உயர்ஜாதியினராக கருதப்படுபவர்களின் குழுவுக்கும், தலித் மக்கள் மற்றும் நக்சல் குழுக்களுக்கும் இடையே, நீண்ட காலமாக, இங்கு மோதல் இருந்து வருகிறது. இதனால்,
கலவர ஜெஹானாபாத் நிலவரம் என்ன?

பீஹாரின் கொலைக்களம் என, எந்த பகுதிக்காவது பட்டம் அளிக்க வேண்டுமானால், ஜெஹானாபாதிற்கு தாராளமாக வழங்கலாம். அந்த அளவுக்கு, இந்தப் பகுதி, இரு ஜாதியினருக்கு இடையேயான வன்முறை களமாக விளங்குகிறது.

ரன்வீர் சேனா எனப்படும் உயர்ஜாதியினராக கருதப்படுபவர்களின் குழுவுக்கும், தலித் மக்கள் மற்றும் நக்சல் குழுக்களுக்கும் இடையே, நீண்ட காலமாக, இங்கு மோதல் இருந்து வருகிறது. இதனால், 1,000த்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.எனினும், 1980ம் ஆண்டு களில் இருந்த நிலை, இப்போது இல்லை.மும்முனை போட்டியை சந்திக்கும் இந்த தொகுதியில், ஆர்.எல்.எஸ்.பி., சார்பில் வென்ற, அருண்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். எனினும், ஆர்.எல்.எஸ்.பி.,யிலிருந்து விலகி, சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார்.


latest tamil news


ஆர்.ஜே.டி., தலைமையிலான, மஹாகத்பந்தன் சார்பில், எம்.எல்.ஏ., சுரேந்திர யாதவ்; தேசிய ஜனநாயக கூட்டணியின் ஐக்கிய ஜனதா தளத்தின், சந்தேஷ்வர் சந்திரவன்சி ஆகியோர், முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
அருண்குமார், இந்த பகுதியின் பெரும்பான்மை, பூமிஹார் ஜாதியை சேர்ந்தவர். கடந்த முறை, இவரிடம் தோற்ற, சுரேந்திர யாதவ், எம்.எல்.ஏ., இந்த முறை வென்றே தீருவேன் என்கிறார்.அதே நேரத்தில், அருண்குமாருக்கு, பூமிஹார் ஜாதியினரின் எதிர்ப்பு அதிகம் உள்ளது. அதுபோல, ஐக்கிய ஜனதாதளம் வேட்பாளர், சந்திரவன்சியையும், தொகுதி மக்களுக்கு அவ்வளவாக தெரியவில்லை.இப்படி இந்த தொகுதியின் நிலைமை, கதம்பமாக இருப்பதால், ஜெஹனாபாத்,எம்.பி., யார் என்பதை, இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாதபடி உள்ளது.- கே.பெலாரி -சிறப்பு செய்தியாளர்


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
16-மே-201914:25:36 IST Report Abuse
இடவை கண்ணன் இது என்ன செய்தி ... ...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-மே-201908:07:47 IST Report Abuse
Natarajan Ramanathan BJP நிதீஷ் கூட்டணி வந்தபின் கொலைகள் மிகவும் குறைந்து விட்டது. இப்போது இந்தியாவில் அதிகம் தேர்தல் வன்முறை நடப்பது மேற்குவங்கத்தில், அதுவும் திரிணமுல் கட்சியில் உள்ள மூர்க்கமத ஆதரவாளர்களால் தான்.
Rate this:
Cancel
svs - yaadum oore,இந்தியா
16-மே-201907:24:34 IST Report Abuse
svs பீஹாரின் கொலைக்களம்?? ஜாதி தகராறு?? இதுக்கு யாரை குறை சொல்வது ?? இதுக்குத்தான் நாட்டின் சட்ட திட்டம், கோர்ட், போலீஸ் என்று ஊழல் இல்லாமல் செயல்படனும்... ஜாதி தகராறு செய்யறவனை கண்ட இடத்தில சுடனும்...... பிரிவினையை வளர்த்துகொண்டே போனால் நாடு நாசமாகும் ......இது நடப்பது புத்த பகவான் அவதரித்த புண்ணிய பூமி.....
Rate this:
svs - yaadum oore,இந்தியா
16-மே-201911:47:54 IST Report Abuse
svsபுத்தர் பிறந்தது இப்போதைய நேபாளத்தில் ...அவர் ஞானம் அடைந்தது பிஹாரில் உள்ள கயா வில் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X