எங்கள் ஆட்சியில் 6 பெண்கள் அமைச்சர்; சுஷ்மா

Added : மே 16, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி: சுதந்திரம் அடைந்த காலம் முதல் மோடி தலைமையிலான அரசில் தான் 6 பெண்களுக்கு காபினட் அந்தஸ்து அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா கூறியுள்ளார்.வாரணாசியில் நடந்த பெண்கள் சம்மேளன கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு காலத்தில்1952-57 ல் ராஜ்குமாரி அம்ரித் கவுர் என்ற ஒரு பெண்ணே காபினட்

புதுடில்லி: சுதந்திரம் அடைந்த காலம் முதல் மோடி தலைமையிலான அரசில் தான் 6 பெண்களுக்கு காபினட் அந்தஸ்து அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா கூறியுள்ளார்.



latest tamil news



வாரணாசியில் நடந்த பெண்கள் சம்மேளன கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு காலத்தில்1952-57 ல் ராஜ்குமாரி அம்ரித் கவுர் என்ற ஒரு பெண்ணே காபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1957- 62 ல் பெண்கள் யாரும் இடம்பெறவில்லை. 1962- 64 ல் சுசீலாநாயர் என்ற ஒரு பெண்ணுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.


latest tamil news



1964- 66 வரை லால்பகதூர் சாஸ்திரி தலைமையிலான அரசில் ஒரே பெண்மணி சுசீலாநாயர் மீண்டும் அமைச்சரானார். 1966- 67 ல் இந்திரா தலைமையிலான அரசில் ஒருவர் பெண் அமைச்சர்.

1967- 71, 1971- 77, 1980- 84 ஆகிய காங்கிரஸ் ஆட்சியில் ஒருவர் மட்டுமே பெண் அமைச்சர். ராஜிவ் பிரதமரான 1984- 89 ல் மோசினா என்ற ஒருவரே அமைச்சராக இருந்தார்.

ஆனால் பா.ஜ., ஆட்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு 6 பேருக்கு காபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. காபினட் அமைச்சர்கள் குழுவில் 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மோடி பெண்களுக்கு அளிக்கும் மதிப்பை காட்டுகிறது. இவ்வாறு சுஷ்மா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-மே-201917:04:40 IST Report Abuse
R. SUBRAMANIAN மோடியா கொடுத்தாரா? அல்லது அடிச்சு பிடுங்கினார்களா இந்த அம்மையார்கள்?
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-மே-201914:10:57 IST Report Abuse
ஆரூர் ரங் முந்தய அரசுகள் பெண்களுக்கு முக்கிய துறைகளைக் கொடுத்ததேயில்லை. முக்கியமற்ற துறைகளையே கொடுத்துவிட்டு போலியாக பெண்ணுரிமை பேசினர். இப்போதோ ராணுவம் வெளியுறவு,  குடிநீர், போன்ற மிக உயர்முக்கியத்துவ இலாக்காக்களை ( சொந்தக் கட்சியினரின் எதிர்ப்புக்கிடையேயும்) கொடுத்துள்ளார் மோதி. பாராட்ட மனமில்லாவிட்டாலும் எதிர்க்கவேண்டாம். இடவொதுக்கீட்டில் பதவி பெற்ற பல அரசு அதிகாரிகள் துவக்கத்தில் திணறினாலும் பின்னர் பெரும் சாதனை புரிவதில்லையா?
Rate this:
Cancel
16-மே-201913:03:08 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மிக சிறந்த அமைச்சரவை மோடியின் அமைச்சரவை. வாஜ்பாய் அமைச்சரவையை போலவே ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்தார்கள். அதற்கு பரிசாக அடுத்தும் பிஜேபி ஆட்சிதான். இந்த முறை சில அமைச்சர்கள் , உடல் நலம் சரியில்லாதவர்கள் , வயதானவர்கள் , சரியாக செயல்படாதவர்கள் மாற்றப்படுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X