காசாளர் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மறுப்பு

Added : மே 16, 2019
Advertisement
மார்ட்டின், காசாளர், பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமி மர்ம மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுத்ததுடன், வழக்கை முடித்து வைத்தது.


கோவை மாவட்டம், உருமண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர், பழனிசாமி. இவர், லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில், கேஷியராக பணியாற்றி வந்தார்.மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கேஷியர் பழனிசாமியிடமும் விசாரணை நடந்தது.

இந்நிலையில், காரமடை, வௌ்ளியங்காடு அருகே குளத்தில், பழனிசாமி பிணமாக கிடந்தார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, காரமடை போலீசில், பழனிசாமியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.


இதையடுத்து, வழக்கை சிபிசிஐடடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். பிரேத பரிசோதனையின் போது நாங்கள் தேர்வு செய்த டாக்டர் இருக்க வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், பழனிசாமி மரண வழக்கு, மாவட்ட குற்றப்பிரிவு பிரிவுக்கு மாற்றப்பட்டதால், சிபிசிஐடி விசாரணை தேவையில்லை எனக்கூறியது. மேலும், பிரேத பரிசோதனை குறித்து மாஜிஸ்திரேட் முடிவு செய்ய வேண்டும். மாஜிஸ்திரேட் விசாரணை சரியில்லை என்றால், நீதிமன்றத்தை நாடலாம். பிரேத பரிசோதனையின் போது குடும்பத்தினர் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X