என்னை சுமந்த தெய்வம் அவள் : 'அம்மா செல்லம்' இயக்குனர் சமுத்திரக்கனி

Added : மே 16, 2019
Advertisement
என்னை சுமந்த தெய்வம் அவள் : 'அம்மா செல்லம்' இயக்குனர் சமுத்திரக்கனி

ஆயிரம் கோடி உறவுகள் இருந்தாலும் 'அம்மா' என்ற ஒற்றை உணர்வு தான் உலகில் அனைத்து உயிரினங்களுக்கும் மாறாத ஒரே உணர்வாகும். அம்மா என்பவள் தியாகம், பொறுமை, கருணை, அன்பு... என பல வடிவங்கள் எடுத்து ஒவ்வொரு மனிதனுக்கும் வழிகாட்டும் நடமாடும் தெய்வம். அம்மா என்றதும் நெகிழ்கிறார் இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி.
அன்னையர் தினத்தை முன்னிட்டு அம்மாவின் பெருமை குறித்து அவர் கூறியது...
அம்மா என்றாலே அதற்கு அர்த்தம் சொல்ல வார்த்தைகளே இல்லை. என் வாழ்க்கையில் எல்லாமே அவர் தான். நான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு காரணம்,78 வயதை தாண்டியும் அவர் ஆரோக்கியமாக வாழ்கிறார் என்ற ஒற்றை நம்பிக்கை தான்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்துாரில் பிறந்தேன். அம்மா, கமலாம்மாள். அவரை நினைத்தாலே 'காட்டு வேலைக்கு செல்லும்போது மாராப்பு சேலையில் என்னையும் கட்டி சுமந்துகொண்டு போன' நினைவு தான் இன்னும் என் கண்களுக்கு முன் வரும்.
ஒரு நாளைக்கு 14 கிலோ மீட்டருக்கு மேல் நடந்தே சென்று விறகு சேகரித்துவிட்டு வீடு திரும்புவார். அதுவரை என் இருப்பிடம் அம்மாவின் மாராப்பு சேலை தான். அம்மாவின் ேதாள் மீது படுத்துக்கொண்டு தான் சாப்பாடு.. துாக்கம்... எல்லாமே.
மாலையில் வீட்டிற்கு வந்ததும் என்னை இறக்கிவிட்டு வீட்டு வேலைகளில் மூழ்கி விடுவார். இப்போதும் நான் வெளியில் போகும்போது மாராப்பில் மகனை துாக்கி செல்லும் ஒவ்வொரு தாயையும் பார்த்தால் என் தாய் நினைப்பு வரும்.
அவரின் உழைப்பு இன்றும் தொடர்கிறது. இந்த நிலைக்கு நான் உயர்ந்த பின், "வேலைக்கு ஏம்மா போற... வீட்டில் நிம்மதியா ரெஸ்ட் எடுமா" என சொல்வேன். ஆனால் "சும்மா உட்காந்தா உடம்பு சரியில்லாம போயிடும்டா ரெண்டு, மூனு மணிநேரம் வெயிலில் அலைந்து வேலை செஞ்சாத்தான் உடம்பு சரியாக இருக்கும்"னு இன்னும் அதே பதிலை தான் எனக்கு சொல்வார். அந்த அவரது சக்தி தான் எனக்கான பலமே.
நான் சினிமாவில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் எனக் கூட அவருக்கு தெரியாது. என்னை பற்றி அக்கம் பக்கத்தில் பேசும்போது "ஓ... அப்படியா... தெரியாதுடா" என்பாள்.
எங்கிருந்தாலும் நாள் தோறும் ஒரு முறையாவது என் அம்மாவிடம் பேசிவிடுவேன். சாப்பிடும் போதும், துாங்கும்போதும் அவரின் உணர்வை நான் அறிவேன். இதனால் எவ்வளவு துாரத்தில் இருந்தாலும் என் அம்மாவை 'மிஸ்' பண்ணிய உணர்வு எனக்கு இருக்காது.
என் தாயுடன் நான் கடந்து வந்த பாதையின் கதை மிகப் பெரியது. நேரம் வரும்போது அதை திரையில் கொண்டு வருவேன். ஒவ்வொரு அம்மாக்களுக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள், என்றார்.
இவரை kitnakani@gmail.com தொடர்புகொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X