தேச அழகியின் நேச அன்னை : மனம் திறக்கும் 'மிஸ் இந்தியா'

Added : மே 16, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
தலை முதல் பாதம் வரை அங்குலம் அங்குலமாய் அவள் அழகு. அவளின் மெல்லுடல் நெளிவுச் சுழிவு கண்டு சலனப்படாத ஆண்கள் இல்லை. கருவிழிகளுக்குள் புதைந்து கதகளி ஆடும் அவளின் கண்களிடம் மனங்கள் தாமே சிறைபடும். தென்றலுக்கு இசைபாடி அசைந்தாடும் அவளின் கார் கூந்தல் எவருக்கும் வலைவிரிக்கும் என்று கவிதை வரிகள் வடிக்க தோன்றும் இவருக்காக!இவர் கடந்த ஆண்டு 'இந்திய அழகி' பட்டம் வென்ற
தேச அழகியின் நேச அன்னை : மனம் திறக்கும் 'மிஸ் இந்தியா'

தலை முதல் பாதம் வரை அங்குலம் அங்குலமாய் அவள் அழகு. அவளின் மெல்லுடல் நெளிவுச் சுழிவு கண்டு சலனப்படாத ஆண்கள் இல்லை. கருவிழிகளுக்குள் புதைந்து கதகளி ஆடும் அவளின் கண்களிடம் மனங்கள் தாமே சிறைபடும்.
தென்றலுக்கு இசைபாடி அசைந்தாடும் அவளின் கார் கூந்தல் எவருக்கும் வலைவிரிக்கும் என்று கவிதை வரிகள் வடிக்க தோன்றும் இவருக்காக!
இவர் கடந்த ஆண்டு 'இந்திய அழகி' பட்டம் வென்ற அனுகீர்த்திவாஸ். இவருக்கு எல்லாமே அம்மா தான்! தோழி என நான் நினைக்கும் அம்மாவால் தான் 'இந்திய அழகி' ஆனேன் என்று பெருமிதம் கொள்கிறார். அன்னையர் தினமான இன்று, அம்மா பற்றி அனுகீர்த்திவாஸின் வார்த்தைகள் இதோ!
* நீங்க தமிழ்ப்பொண்ணு தானா?பெற்றோர் இருவருமே கேரளாவில் பிறந்தவர்கள். அப்பா பிரசாத் திருச்சூர், அம்மா செலினா பாலக்காடு. திருமணத்துக்குப் பின் பெற்றோர் திருச்சியில் குடிபுகுந்தனர். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தமிழகத்தில் தான் என்பதால், நான் பக்கா தமிழ்ப்பொண்ணுதாங்க. தமிழே என் தாய்மொழி. யார் கேட்டாலும் ' நான் தமிழச்சி'னு கெத்தா சொல்வேன்.
* அம்மா செலினாதான் உங்க உயிராமே!அம்மாவ யாருக்குதாங்க பிடிக்காது. ஆனால் எனக்கும், என் தாய்க்குமான பந்தம் ஒப்பற்றது. என் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கைக்கு எல்லையில்லை. என் விருப்பங்களுக்கு அவர் வேலிபோட்டதில்லை. உறவினர்களும், அண்டைவீட்டாரும் எனக்கு எல்லைமீறிய ஆசைகள் இருப்பதாக அம்மாவிடம் குற்றச்சாட்டுகளை குவித்தபோதெல்லாம் அலட்டிக்கொண்டதில்லை. 'ஒரு நாள் என் மகள் சாதிப்பாள்' என நம்பினார். அந்த நம்பிக்கையை நான் வீணடிக்கவில்லை.
* அப்படி என்ன ஆசைப்பட்டீங்க.என் சிறுவயதிலேயே அம்மாவை தந்தை பிரிந்துவிட்டார். ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து, என்னையும் தம்பியையும் அம்மாவே பார்த்துக்கொள்கிறார். குடும்பம் கஷ்டத்தில் தவித்தபோதும் திருச்சியில் பெரிய பள்ளி ஒன்றில் தான் படிப்பேன் என ஒற்றைக்காலில் நின்றேன். செலவை பொருட்படுத்தாது அங்கேயே படிக்க வைத்தார். ஒரே சமயத்தில் தடகள வீராங்கனையாகவும், 'வெஸ்டன் டான்சர்' ஆகவும் விரும்பினேன். முரணற்ற ஆசை என தடைபோடாமல், அதற்கும் சம்மதம் வழங்கினார். 'ரன்னிங்' பயிற்சி செல்ல காலையிலேயே எழுப்பியும்விட்டார். கல்லுாரிக்கு சென்னை செல்வேன் என்றேன். அதையும் நிறைவேற்றினார். சிறு வயது முதலே அவ்வப்போது குட்டை உடை அணிவேன். அதற்கும் அனுமதித்தார். பாதை தவறமாட்டேன் என நம்பிக்கை வைத்துள்ளார்.
* அம்மா கவலைப்படும்படி நடந்ததுண்டாஇல்லை. எள்ளளவு ரகசியம் கூட எனக்கில்லை. அனைத்தையும் அம்மாவிடம் பகிர்ந்துகொள்வேன். அவர் தான் எனது தலை சிறந்த தோழி.
* தடகள வீராங்கனை இந்திய அழகியானது எப்படி?கல்லுாரி தோழி கடந்தாண்டு நடந்த அழகி போட்டியில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தாள். நானும் விளையாட்டாக வருகிறேன் என்றேன். அம்மாவும் அனுமதித்தார். இதனால் கொஞ்சம் 'சீரியசாக' உழைத்தேன். இறுதியில் இந்திய அழகி பட்டம் எனதானது.
* செலினா எந்த வகையில் தனித்துவமானவர்?இச்சமூகத்தை போல பெண் பிள்ளைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என அவர் பல்வேறு கட்டுப்பாடுகளை என் மீது திணித்திருந்தால், பள்ளியில் நான் தடகள வீராங்கனையாகவோ, 'வெஸ்டன்' டான்சராகவோ ஜொலித்திருக்க முடியாது. உயர் கல்விக்கு சென்னை சென்றிருக்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக அழகி போட்டியில் பங்கேற்றிருக்கவே அனுமதி கிடைத்திருக்காது. அவர் மனசு வைத்ததால்தான் இன்றைக்கு நீண்ட இடைவெளிக்கு பின் தென்னகத்தில் இருந்து ஓர் 'இந்திய அழகி' தோன்ற முடிந்தது. 'இது உனக்கு தேவையில்லை' என என் விருப்பங்கள் எதற்கும் அவர் முட்டுக்கட்டை போட்டதில்லை. அந்தவகையில் என் தாய் தனித்துவமானவர்.
* அம்மாவுடனான நெகிழ்ச்சியான தருணம்...!'இந்திய அழகி' பட்டம் வென்ற கையோடு ஊர் திரும்ப முடியவில்லை. ஒரு வாரம் கழித்தே சென்னை வந்தேன். வரவேற்க விமான நிலையம் வந்த அம்மா, என்னை கட்டியணைத்து கண்ணீரால் என்னுடலை நனைத்தார். எதற்கும் கண் கலங்காத தைரியமான பெண். 'என் மகள் சாதித்துவிட்டாள்' என்று ஆனந்த கண்ணீர்விட்டார். இதுவே என் நெஞ்சில் பதிந்த நெகிழ்ச்சியான நிகழ்வு.
* அம்மாவின் கனவு?ஆதரவற்ற குழந்தைகள், பிள்ளைகள் கைவிட்ட முதியோரை கவனிக்க தனித்தனியாக காப்பகம் அமைக்க வேண்டும் என அவர் சொல்வார். நல்ல நிலைக்கு வரும்போது, அவரது ஆசையை நிறைவேற்றுவேன்.
* அன்னையர் தினத்தில் அம்மா, மகள்களுக்கு...!பெண் பிள்ளைகளை வீட்டுக்குள் வைத்தே வளர்க்க வேண்டும் என அம்மாக்கள் எண்ணக்கூடாது. அவர்களின் ஆசைக்கு ஊக்கம் அளித்தால் நிச்சயம் எத்துறையிலும் வெற்றிக்கொடி நாட்டுவர். பெண் குழந்தைகளும் அம்மாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் நடக்க வேண்டும். நம் மீது அவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அம்மாவிடம் எதையாவது மறைக்கிறோம் என்றால், நாம் தவறு செய்கிறோம் என அர்த்தம்.
தமிழ் மக்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்!

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CS CBE - Coimbatore,இந்தியா
27-மே-201912:30:02 IST Report Abuse
CS CBE நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் காரியம் ஆக வேண்டும் என்றால் நான் தமிழன் தமிழச்சி என்று கூறுவது ஒரு தந்திரம். தமிழின உணர்வு என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே வரக்கூடியது.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27-மே-201907:46:06 IST Report Abuse
 nicolethomson வீட்டில் என்ன மொழி பேசுவீங்க ? அதுதாங்க தாய்மொழி , சொம்மா தமிழச்சி என்று மொளகா அறைக்காதீங்க , எத்துணை நிஜ தமிழச்சிகளை ஏமாத்தி இந்த நிலையை அடைந்தீங்க ?
Rate this:
sumithran - singapore,சிங்கப்பூர்
30-மே-201913:09:41 IST Report Abuse
sumithranஎத்தனை தமிழர்கள் வீட்டில் தமிழ் பேசுகிறார்கள்?. தெலுங்கு நாயுடு, கன்னட செட்டியார், சௌராஷ்டிர மக்கள் என பலரது வீட்டில் தமிழ் பேசுவதில்லேயே..? இவர்களுக்கு எல்லாம் ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ, குஜராத்திலோ எந்த சொந்த பந்தங்களோ, எவ்வித தொடர்போ இல்லை. உங்களை போலவே தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் படித்து வளர்ந்து, தமிழனாகவே உணருகிறேன் என்பவர்களை ஏன் தமிழர்களாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?. தமிழ் நாடு, கேரளா என்பதெல்லாம் 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்பாக மட்டுமே, நாமாகவே போட்டுக் கொண்ட கோடு. அதை வைத்து மனிதர்களை எப்படி தரம் பிரிக்கிறீர்கள்? மதத்தாலும், ஜாதியாலும் பிரித்தது போதாது என்று தமிழ், தமிழன், தமிழ் உணர்வு என்று மக்களை கூறு போட்டு அரசியல் லாபம் பார்க்க, சிலர் தூண்டிவிடுவதை பகுத்துணர்ந்து பாருங்கள். தமிழ் பெண் இந்தியா அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டதை எண்ணி அகம் மகிழுங்கள்....
Rate this:
Cancel
Krish - Chennai ,இந்தியா
27-மே-201907:42:00 IST Report Abuse
Krish எல்லோருக்கும் கடவுளே துணை. வாழ்த்துக்கள். தமிழ் பெண்ணாக..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X