அன்புள்ள அம்மாவும் அழகான திரிஷாவும்| Dinamalar

அன்புள்ள அம்மாவும் அழகான திரிஷாவும்

Added : மே 16, 2019 | கருத்துகள் (2)
Share
'என்ன இவங்க திரிஷா அம்மாவா; பார்க்க அக்கா மாதிரி இருக்காங்க' என ஆரம்பத்தில் திரிஷாவின் அம்மாவை பார்த்தவர்கள் இப்படி தான் ஆச்சர்யப்பட்டார்கள். இன்றும் அந்த ஆச்சர்யம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது... இளமை துள்ளும் அழகான திரிஷாவும், அன்புள்ள அம்மா உமா கிருஷ்ணனும் அன்னையர் தினத்திற்காக மனம் திறந்தார்கள்.திரிஷா பதிலளிக்கிறார்...* ஆரம்பத்தில் மாடலிங் துறைக்கு வர
அன்புள்ள அம்மாவும் அழகான திரிஷாவும்

'என்ன இவங்க திரிஷா அம்மாவா; பார்க்க அக்கா மாதிரி இருக்காங்க' என ஆரம்பத்தில் திரிஷாவின் அம்மாவை பார்த்தவர்கள் இப்படி தான் ஆச்சர்யப்பட்டார்கள். இன்றும் அந்த ஆச்சர்யம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது... இளமை துள்ளும் அழகான திரிஷாவும், அன்புள்ள அம்மா உமா கிருஷ்ணனும் அன்னையர் தினத்திற்காக மனம் திறந்தார்கள்.திரிஷா பதிலளிக்கிறார்...
* ஆரம்பத்தில் மாடலிங் துறைக்கு வர அம்மா எப்படி உதவினார்?மாடலிங் பண்ண வேண்டும் என்று அம்மாவிடம் தான் முதலில் கூறினேன். அவர் விளம்பரத் துறையினரை தொடர்பு கொண்டு என்னை தயார் செய்தார். மாடலிங் போட்டோ இல்லாததால் குடும்ப போட்டோ ஒன்றை விளம்பரத்துறையினருக்கு அனுப்பி வைத்தேன். இப்படித் தான் மாடலிங் துறைக்கு வந்தேன்.
* மிஸ் சென்னை ஆனதும் அம்மா என்ன சொன்னார்கள்?'மாடலிங் கோ ஆர்டினேட்டர்' சோபா வித்யா கூறித்தான் மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றேன். போட்டியில் வாழ்க்கையில் எது முக்கியம் என கேட்டதற்கு நேர்மையாக இருப்பது முக்கியம், ஆனால் அப்படி இருப்பது கஷ்டம் என கூறினேன். இந்த பதில் நடுவர்களுக்கு பிடித்ததால் மிஸ் சென்னையாக அறிவித்தனர். அம்மா கண்ணில் ஆனந்த கண்ணீர் கொட்டியது.
* படிப்பா, நடிப்பா முடிவு யாருடையது ?சினிமாவிற்கு செல்வது ரிஸ்க் என அப்பா, அம்மா பயந்தனர். இரண்டு ஆண்டு நேரம் கேட்டேன். சரியாக வந்தால் சினிமா, இல்லை படிக்கிறேன் என அம்மாவிடம் சத்தியம் செய்தேன். அதன்படி 'லேசா லேசா', 'மவுனம் பேசியதே' என்னை துாக்கி நிறுத்தியது..அம்மா நடிப்பை தொடர ஊக்கம் தந்தார்.
* அம்மா சமையலில் விரும்புவதுஅம்மா கையால் சமைக்கும் மோர்க் குழம்பு, ரசம், உருளைக்கிழங்கு வறுவல் பிடிக்கும்.
* ஆரம்பத்தில் படப்பிடிப்பிற்கு அம்மா வந்தாங்களே?முதல் இரண்டு ஆண்டுகள் எல்லா படப்பிடிப்பிற்கும் அம்மா கூடவே வருவார். எனக்குள் தன்னம்பிக்கை வந்த பின் உதவியாளர்களை நியமித்து படப்பிடிப்பு வருவதை குறைத்தார்.
* அப்பா மறைவு, திருமணம் நின்றது போன்ற நேரங்களில் ?பாட்டி, அம்மா என அனைவரும் தைரியமானவர்கள். அவர்கள் தந்த நம்பிக்கையால் நான் வீட்டில் முடங்கி அழுது புலம்பவில்லை. அப்பா மறைவு வருத்தம் தான்! ஆனால், சில மாதங்களுக்கு பின் எங்களை அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்த வேண்டிய சூழலில் இருந்தோம்.நான் அவசரமாக முடிவு எடுப்பதில்லை. ஆரம்பத்தில் பெரிய நடிகர்களின் படங்களில் சில காட்சிகள் வந்தால் போதும் என ஒத்துக்கொண்டேன். தற்போது கதை, படம் எனக்கு சரியாக இருக்கும் என நினைத்தால் மட்டுமே ஒத்துக் கொள்கிறேன். உதாரணத்திற்கு 96 படம்.
* வெளியூர் படப்பிடிப்பில் அம்மாவை மிஸ் செய்கிறீர்களா?எந்த ஊரில் இருந்தாலும் என்ன சாப்பிடுறேன், என்ன காட்சி எடுத்தாங்க, யார் ஹீரோ என எல்லாமே அம்மாவிடம் போனில் ஷேர் பண்ணுவேன். அதனால், அம்மாவை நான் மிஸ் பண்ணவே மாட்டேன். இவ்வாறு கூறினார்.
திரிஷாவின் தோழி நான்!
திரிஷாவின் அம்மாவிடம் ஒரே கேள்வி...
* திரை உலகில் மகளின் சாதனை குறித்து ?
எங்கள் குடும்பத்தில் யாரும் சினிமாவில் இல்லை. திரிஷா தான் ஆசைப்பட்டு வந்து நிறைய சாதிச்சிருக்கா. சீனியர் நடிகையாக உணர்வதால் என் உதவி அதிகம் தேவையில்லை. கதை, படம் தேர்வு செய்வதில் திறமைசாலி. திரிஷா என்னை தோழியாக பார்க்கிறாள். இருவரும் சண்டை போடுவோம்; பிறகு ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்து கொள்வோம். அதிக சுதந்திரம் கொடுக்க மாட்டேன். கேள்வி கேட்கும் நேரத்தில் கேட்க தவற மாட்டேன். திரிஷாவுக்கு ஒரு அம்மாவா, தோழியா, சகோதரியா, கால்ஷீட் பார்க்கும் மேனேஜராக இருப்பதில் சந்தோஷம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X