சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement
   'டவுட்' தனபாலு

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்: கடந்த லோக்சபா தேர்தலில், மோடிக்கு, மன்மோகன் சிங்கும், சோனியாவும் போட்டியாக இருந்தனர். ஆனால், இந்த தேர்தலில், மோடிக்கு போட்டியே இல்லை.

டவுட் தனபாலு: மன்மோகன் சிங், சோனியா இருவரும், மோடிக்கு போட்டியாக இருந்தனர் என்ற தகவலையே, இப்போது தான் சொல்றீங்க... ராகுலின் செல்வாக்கு குறித்து வாய் திறக்க, இன்னும், ஐந்தாண்டுகள் ஆகுமா... கண்ணுக்கு எட்டியவரை, எதிரிகளே இல்லை என்றால், அப்புறம் எதற்குங்க, கூட்டணிக் கட்சிகளைத் துாக்கிச் சுமக்குறீங்க என்ற, 'டவுட்'டுக்கு, என்ன பதில் சொல்லிச் சமாளிப்பீங்க...!

காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் என, கட்சியினரும், ஆதரவாளர்களும், என்னைப் பற்றி கூறுகின்றனர்; இது, அவர்கள் என் மீது வைத்த அன்பை காட்டுகிறது.

டவுட் தனபாலு: காங்கிரஸ் தொண்டர்களின் மனநிலை, டில்லி தலைமைக்குத் தெரியலை... அதனால் தான், உங்களுக்கு ஆதரவாக எந்த உத்தரவாதத்தையும், இன்று வரை தெரிவிக்கவில்லை என்பதைத் தான், இப்படி, நாசுக்காக குத்திக் காட்டுறீங்களோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!


பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி: உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.

டவுட் தனபாலு: லோக்சபா தேர்தல் முடிவு வெளியாகட்டும்... அப்புறம், உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகட்டும்... அதன்பின், இதைச் சொல்லுங்க... இப்பவே சொன்னால், அது எடுபடாது... ஏன் என்றால், 'தேர்தலுக்கு முன், நீங்க என்ன சொல்வீங்களோ, அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டைத் தான், இதுவரை எடுத்து வந்திருக்கீங்க'ங்கற, 'டவுட்' மக்களிடம் இருந்துக்கிட்டே இருக்கு!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guna - Chennai,இந்தியா
18-மே-201906:43:16 IST Report Abuse
Guna தினமலர் - டீக்கடை பெஞ்ச் மற்றும் டவுட் தனபால் என இரண்டுமே சரியாக வருவதில்லை. முதலில் தெரிகிற விஷயம் க்ளிக் செய்த பின் வராமல் முந்தய நாள் விஷயம் தான் வருகிறது. சரி செய்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X