பதிவு செய்த நாள் :
'போபர்ஸ்' ஊழல் வழக்கு சி.பி.ஐ., மனு, 'வாபஸ்'

புதுடில்லி: போபர்ஸ்' பீரங்கி பேர ஊழல் வழக்கை, மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி, டில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, சி.பி.ஐ., நேற்று, 'வாபஸ்' பெற்றது.

 'போபர்ஸ்', ஊழல் வழக்கு, சி.பி.ஐ., மனு, 'வாபஸ்'


கடந்த, 1986ல், மத்தியில், ராஜிவ் தலைமை யிலான, காங்., அரசு பதவியில் இருந்தது. அப்போது, நம் ராணுவத்துக்கு, ஐரோப்பிய நாடான, சுவீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து, பீரங்கிகள் வாங்கப்பட்டன.


இதில், 64 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகவும், அரசியல் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு, இதில்

தொடர்புள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய பிரதமர், ராஜிவ் உள்ளிட்டோரின் பெயர்கள், இதில் அடிபட்டன.இது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. இந்த வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட, போபர்ஸ் நிறுவனம்உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து, 2005ல், தீர்ப்பு அளித்தது.


இதை எதிர்த்து, 2018ல், சி.பி.ஐ., தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், 13 ஆண்டுகள் தாமதித்து, மேல்முறையீடு செய்ததை காரணம் காட்டி, இந்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், கடந்தாண்டு பிப்ரவரியில், டில்லி பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், போபர்ஸ் வழக்கில், மேற்கொண்டு விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி கோரப்பட்டிருந்தது.


இந்நிலையில், போபர்ஸ் வழக்கில், விசாரணை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவதாக, நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தரப்பில், நேற்று தெரிவிக்கப்பட்டது.'

Advertisement

இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, வரும் நாட்களில் முடிவு செய்யப் படும்' என, சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப் பட்டது.


இதையேற்ற, மாஜிஸ்திரேட் நவீன் குமார் காஷ்யப், ''மனுவை தாக்கல் செய்தவர்களுக்கு, அதை வாபஸ் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன,'' எனக் கூறி, மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்து,உத்தர விட்டார். இதற்கிடையே, போபர்ஸ் வழக்கு விசாரணையை தொடர போவதாக, சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (8+ 8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,இந்தியா
17-மே-201916:51:38 IST Report Abuse

sahayadhasஎன்றும் கிடைக்காம அலைகிறார்கள்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-மே-201911:47:22 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்தேர்தலுக்காக, அரசியல் ஆதாயத்துக்கு மட்டுமே இவைகளை தூசி தட்டும் பாஜக.

Rate this:
Suri - Chennai,இந்தியா
17-மே-201908:21:07 IST Report Abuse

Suriகுப்புற விழுந்து விட்டேன் , ஆனால் மீசையில் மண் ஒட்டவே இல்லை பீ ஜெ பீயின் போதைக்கு சிபிஐ ஊறுகாய்.

Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
17-மே-201915:52:40 IST Report Abuse

sankarவேறு மனு ஸ்ட்ரோங்கா தாக்கல் செய்யப்படும் வெயிட் அண்ட் வாட்ச் ...

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X