பதிவு செய்த நாள் :
கோல்கட்டாவில் வித்யாசாகருக்கு புதிய சிலை
தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி உறுதி

மா, ''கோல்கட்டாவில், திரிணமுல் காங்கிரஸ் குண்டர்களால் உடைக்கப்பட்ட, ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலைக்கு பதிலாக, புதிய சிலையை, மத்திய அரசு அமைத்து தரும்,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 கோல்கட்டா, வித்யாசாகர், புதிய சிலை, தேர்தல், பிரசாரம்,பிரதமர் மோடி, உறுதி


உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மா லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து, பிரதமர் மோடி, நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:மேற்கு வங்கத்தில், மகளிர் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட, தொலைநோக்கு சிந்தனையாளர், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை, திரிணமுல் காங்கிரஸ் குண்டர்கள் உடைத்து, சேதப்படுத்தி உள்ளனர்.


அந்த சிலைக்கு பதிலாக, புதிய பஞ்சலோகத்தாலான சிலையை, மத்திய அரசு நிறுவும். சிலை உடைப்பில் ஈடுபட்டோருக்கு, கடும் தண்டனை வழங்கப்படும்.மேற்கு வங்கத்தில், மித்னாபூர் மற்றும் தாகூர் நகரில் நான் பேசிய கூட்டங்களிலும், திரிணமுல் கட்சியினர், அராஜகம் செய்தனர். கூச் பீஹார் பகுதியில், என் பேரணி மேடைக்கு அனுமதி ,

மறுத்து, அங்கு தன் கட்சி கூட்டத்திற்கு, பிரமாண்ட மேடை அமைத்தவர் தான், மம்தா.அடுத்து, டம் டம்மில் தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல வேண்டும். என் ஹெலிகாப்டரை தரையிறக்க, மம்தா அனுமதிப்பாரா என, தெரியவில்லை.அவரது அடாவடியை, நாம் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்; தற்போதுநாடே பார்க்கிறது.


கட்டிப் போட்டுள்ளது


மேற்கு வங்கத்தில், உத்தர பிரதேசம், பீஹார் மற்றும் பூர்வாஞ்சல் மக்களுக்கு, மம்தா அரசு இழைக்கும் அநீதியை எதிர்த்து, மாயாவதி குரல் கொடுப்பார் என, எதிர்பார்த்தேன். ஆனால், அதிகாரப் பசி, அவரை கட்டிப் போட்டு வைத்துள்ளது. தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே, 'மோடியை விரட்டுவோம்' என, எதிர்க்கட்சிகளின் 'மெகா' கூட்டணி, கூச்சலிட்டது.



மத்தியில், பலமற்ற அரசு அமைந்தால், அதை மிரட்டி, தங்கள் தேவைகளை சாதித்துக் கொள்ளலாம் என்பதே, மெகா கூட்டணியின் கணக்கு. இதற்காகவே, எதிரெதிர் துருவங்களாக இருந்த, பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.


ஜாதியைசொல்லி ஓட்டு வாங்கியவர்கள், அதிகாரத்திற்கு வந்ததும், சொத்துக்களை வாங்கிக் குவித்ததை பார்த்தோம். மெகா கூட்டணி, கோசி லோக்சபா தொகுதியில், பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளானவரை, வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

Advertisement

ராஜஸ்தானில், காங்., அரசுக்கு ஆதரவளிக்கும் மாயாவதி, ஆல்வாரில் நடந்த பாலியல் கொடுமைக்கு மவுனம் சாதிப்பதில் இருந்து, அவர் குணத்தை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் பேசினார்.


பா.ஜ., பணம் தேவையில்லை

பா.ஜ.,வினருக்கு, சிலைகளை உடைப்பது கைவந்த கலை. ஏற்கனவே, திரிபுராவில் அதை நிகழ்த்தியுள்ளனர். தற்போது, மேற்கு வங்கத் தின், 200 ஆண்டு பாரம்பரிய கலாசார சின் னத்தை அழித்து விட்டனர். புதிய வித்யாசாகர் சிலை அமைக்கப்படும் என, பிரதமர் மோடி கூறியுள்ளார். எங்களுக்கு, பா.ஜ., பணம் தேவை யில்லை. சிலையை பிரமாண்டமாக நிறுவக் கூடிய வசதி, மேற்கு வங்கத்திற்கு உள்ளது. மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu - chennai,இந்தியா
17-மே-201916:01:45 IST Report Abuse

Visuடாடா நானோ தொழிற்சாலை கமிஷன் கிடைக்காத காரணத்தால் கலவரம் செய்தது மம்தா என்பதை மறந்து விட்டீர் சிங்கப்பூர் சீமான்

Rate this:
P.K. GANESAN - chennai ,இந்தியா
17-மே-201913:30:04 IST Report Abuse

P.K. GANESANவன்முறையை கட்டவிழ்த்து ஏவி விடும் மம்தாவை நீ புகழ்வது வந்தேறிகளாகிய கள்ள குடியேறிகளை ஆதரிப்பது இவை தேச துரோகம் என்று தெரியவில்லையா?

Rate this:
Sahayam - cHENNAI,இந்தியா
17-மே-201913:27:33 IST Report Abuse

Sahayamமம்தா சீக்கிரத்தில் அர்ரெஸ்ட் பண்ணுவாங்க புரிஞ்சிப்பீங்க

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X