பதிவு செய்த நாள் :
கண்டனம்!
தேர்தல் ஆணையத்துக்கு எதிர்க்கட்சிகள்...
விஸ்வரூபமாகிறது மேற்கு வங்க பிரச்னை

புதுடில்லி:மேற்கு வங்க மாநிலத்தில், தேர்தல் பிரசாரத்தை முன்னதாக முடித்துக் கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு, பிரதமர் நரேந்திர மோடியின் பிரசார கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கும் வகையில் உள்ளதாக, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள், கண்டனம், விஸ்வரூபம், மேற்கு வங்கம், பிரச்னை



மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான,திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது.கோல்கட்டாவில், நேற்று முன்தினம் நடந்த, பா.ஜ., தலைவர் அமித்ஷா தலைமையிலான பேரணியின்போது, அக்கட்சி தொண்டர்களுக்கும்,திரிணமுல் காங்.,தொண்டர்களுக்கும் இடையே மோதல்ஏற்பட்டது.

வன்முறை நடந்ததால், இன்று மாலையுடன் முடிவடையும் பிரசாரத்தை, நேற்று இரவுடன் முடித்துக் கொள்ள, தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது.இதற்கு, எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. பா.ஜ.,வுக்கு ஆதரவாக, தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி உள்ளன.

காங்., செய்தித் தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:பிரதமர் மோடியின்

இரண்டு பிரசார கூட்டங்கள் பாதிக்காத வகையில், இரவு வரை பிரசாரம் செய்யஅனுமதிப்பதாக, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது.


இதனால், அதன் சுதந்திரமான செயல்பாடு குறித்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள், மோடியின் நடத்தை விதிமீறல் களாக மாறியுள்ளது. தேர்தல்ஆணையத்தின் நியமனங்களில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பா.ஜ., மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, அக்கட்சி தலைவர் அமித்ஷா, நெருக்கடி கொடுத்தால், அதை தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவித்திருக்க வேண்டும்.பயமில்லாமல், நெருக்கடிக்கு பணியாமல், தேர்தல் ஆணையம் பணியாற்ற வேண்டும். கடந்த, 24 மணி நேரத்தில் நடந்தவைகளை பார்க்கும்போது, பிரதமரின் நாற்காலி; தேர்தல் ஆணையத்தின் கவுரவம்; ஜனநாயகம் ஆகியவை கடும் அபாயத்தில் உள்ளன என்பது தெரிகிறது.இவ்வாறு, அவர்கூறினார்.


உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் தலைவருமான, மாயாவதி கூறிய தாவது:மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசை கவிழ்க்க வேண்டும் என, திட்டமிட்டு, பா.ஜ., செயல்படுகிறது.


இதற்காக மிகவும் ஆபத்தான வழிமுறையை அவர்கள் கையில் எடுத்துஉள்ளனர்; வன்முறையில் இறங்கியுள்ளனர். ஆனால், மத்திய அரசின் நெருக்கடிக்கு தேர்தல் ஆணையம் பணிந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு, அவர்கூறினார்.

Advertisement

மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி கூறுகையில், ''பா.ஜ.,வின் உத்தரவை ஏற்று, பிரசாரத்தை முன்னதாக முடிக்கும் நடவடிக் கையை, தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. பிரதமரின் கூட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஒருதலைபட்சமாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது,'' என்றார்.

பணிக்கு வரவில்லை

கோல்கட்டாவில் நடந்த தேர்தல் வன்முறையை தொடர்ந்து, மாநில, சி.ஐ.டி., பிரிவின் கூடுதல், டி.ஜி.பி.,யான, ராஜிவ் குமாரை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மாற்றி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால், அவர், டில்லியில், நேற்று காலை பணிக்கு வரவில்லை.முன்னாள் கோல்கட்டா கமிஷனரான, ராஜிவ் குமார், ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர். 'சிட்பண்ட் மோசடி வழக்குகள் தொடர்பாக விசாரித்த அவர், அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை' என, சி.பி.ஐ., கூறியிருந்தது.அதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை செய்ய முயன்ற, சி.பி.ஐ., அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அவரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள்விசாரித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (11+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-மே-201904:53:18 IST Report Abuse

J.V. Iyerமம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு கவிழவேண்டும். இவர் ஒரு ராட்சசி. ரௌடி. கேடுகெட்ட அரசியல்வாதி. கட்டுமரம்போல செயல்படுகிறார்.

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
17-மே-201911:39:48 IST Report Abuse

Darmavanதினமலரில் காங்கிரஸ் /கட்டுமற அனுதாபிகள் இருப்பதாக தெரிகிறது.ஒரு சென்சேஷன் உண்டாக்க என்ன தலைப்பு 'விஸ்வரூபம்'/கண்டனம் என்றெல்லாம் இதெல்லாம் சந்தர்ப்பவாத பச்சோந்திகளின் கூப்பாடு தன் அக்கிரமத்துக்கு/அட்டூழியத்துக்கு தடை கூடாதென்று ...மேற்கு வங்கத்தில் நடப்பதை எத்தனை TV க்கள் காட்டுகின்றன அப்படியும் தெளிவில்லையா.கண்டனம் தான் கண்டிப்புக்குரியது. தேர்தல் கமிஷன் அல்ல.

Rate this:
JIVAN - Cuddalore District,இந்தியா
18-மே-201917:12:10 IST Report Abuse

JIVANபசிஸிட் அனுதாபிகள் நிறைய இருக்கும் போது ஒரு சிலர் அவர்கள் அனுதாபியாக இருப்பது தவறில்லையே ...

Rate this:
Suresh - chennai,இந்தியா
17-மே-201910:36:40 IST Report Abuse

Sureshஒரு காலத்தில் மரியாதையோடு செயல்பட்ட தேர்தல் ஆணையம்

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X