பொது செய்தி

தமிழ்நாடு

தென்மாவட்ட மயில்களை பாதுகாக்க சென்னை கொண்டு செல்லலாமா

Added : மே 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மதுரை, தென்மாவட்டங்களில் பாதுகாப்பின்றி உள்ள மயில்களை பராமரிக்க சென்னை ராஜ்பவன், வண்டலுார், கிண்டி பூங்காக்களுக்கு கொண்டு செல்வது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை தனபதி தாக்கல் செய்த பொதுநல மனு: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் 96 ஏக்கரில் அமைந்துள்ளது. கஜா புயலால் அவ்வளாகத்திலிருந்த பல்வேறு மரங்கள் வேருடன் சாய்ந்தன. தண்ணீர் பற்றாக்குறையால் அங்கிருந்த பல்வேறு பறவைகள், மயில்கள் இடம் பெயர்ந்தன. தற்போது வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சில மயில்கள் தண்ணீர், உணவு தேடி வெளியேறும்போது, சாலை விபத்தில் சிக்கி பலியாகின்றன.கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மயில்களை பாதுகாக்க வேண்டும். தண்ணீர் மற்றும் உணவு வசதி செய்ய வேண்டும் என புதுக்கோட்டை கலெக்டர், மாவட்ட வன அலுவலருக்கு மனு அளித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.தண்டபாணி அமர்வு: இதுபோல் தென்மாவட்டங்களில் பாதுகாப்பின்றி உள்ள மயில்களை பராமரிக்க சென்னை ராஜ்பவன், வண்டலுார் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா உட்பட வேறு பூங்காக்களுக்கு கொண்டு செல்வது குறித்து தமிழக அரசுத் தரப்பில் ஜூன் 6 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-மே-201910:13:20 IST Report Abuse
Bhaskaran ஒரு பகுதியில்வாழும் மயில்கள் மற்றபறவைகள்அந்தப்பகுதியில் சூழ்நிலைக்குற்றபடிவாழ்வதற்குத்தகுந்தவாறு இயற்கை உதவுகிறது அந்தப்பறவைகளை தன்னீர்த்தட்டுபாடுமற்றும் வெயில் அதிகமுள்ள சென்னைக்கு மாற்றுவது எப்படி சரியாகும் மேலும் நம் உயிரியல் பூங்கா ஊழியர்கள் இந்தமயில்களை நல்லபடியாகபாதுகாப்பார்கள் என்பதற்கு யார் உத்தரவாதம் தருவது இங்கேகொண்டுவந்தவுடன் சூழ்நிலை ஒத்துக்கொள்ளாமல் இறந்துவிட்டனஎன்று செய்தியாளர்களுக்கு ஒரேவரியில் பதிலளித்துக்கதையை முடித்துவிடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X