பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் புறப்படும் நேரம் அட்டவணை அவசியம்

Added : மே 16, 2019
Advertisement

காஞ்சிபுரம்: 'காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில், பஸ்கள் வரும், புறப்படும், கால அட்டவணை அமைக்க வேண்டும்' என, பயணியர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து, சென்னை, திருச்சி, பெங்களூரூ, கும்பகோணம், திருப்பதி, திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும், அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.சென்னை பஸ்கள் நிற்கும் இடத்தில், நேர காப்பாளர் அலுவலகம் உள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள, 'லைட் போர்டு' கால அட்டவணையில் உள்ள எழுத்துகள், சிறிய அளவிலும், நிறம் மங்கிய நிலையிலும் உள்ளது.மேலும், இரவு நேரத்தில், அந்த போர்டில் உள்ள விளக்குகள் ஒளிர்வதில்லை. இதனால், பஸ் புறப்படும் நேரத்தை பயணியர் தெரிந்துகொள்ள சிரமப்படுகின்றனர்.தற்போது, புதிய வழித்தடத்தில், இடைநில்லா பஸ் மற்றும் பல்வேறு புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.எனவே, பயணியர் கண்களுக்கு நன்றாக தெரியும்படி, பெரிய எழுத்தில் எழுதப்பட்ட, பஸ் கால அட்டவணை புதிதாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைஎழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X