பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் குறைதீர் முகாமில் புதிய கார்டு வினியோகம்

Added : மே 16, 2019
Advertisement

சென்னை, ரேஷன் குறைதீர் முகாமில் பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளது.ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் நீக்கல்; முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்ய உணவு வழங்கல் துறை மாதம்தோறும் குறைதீர் முகாம் நடத்துகிறது. அதில் ரேஷன் பொருட்தொலைத்தவர்களுக்கு அரசு 'இ - சேவை' மையங்களில் 30 ரூபாய் கட்டணத்தில் மாற்று கார்டுகள் வழங்கப்பட்டன. அங்கு திடீரென அதிக கட்டணம் வசூலித்ததால் மாற்று கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது.புதிய ரேஷன் கார்டுகள் சென்னையில் அச்சிடப்பட்டு மாவட்ட கலெக்டர்களின் அலுவலகங்களுக்கு அனுப்பி பயனாளிகளிடம் வழங்கப்படுகிறது. இதனால் அவற்றை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.இதுகுறித்து கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய ரேஷன் கார்டுகளை அனைத்து மாவட்டங்களிலும் அச்சிட்டு வழங்க விரைவில் கருவிகள் வாங்கப்படும். அதில் மாற்று கார்டுகள் அச்சிடப்பட்டு 20 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படும்.ரேஷன் கார்டு தயாரானதும் அந்த விபரம் எஸ்.எம்.எஸ். வாயிலாக பயனாளிகளிடம் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் விண்ணப்பதாரர்கள் ரேஷன் கார்டுகளை கேட்டு தினமும் அலுவலகம் வருகின்றனர்.மாதம்தோறும் சென்னையில் இரண்டாவது சனிக்கிழமை; மற்ற மாவட்டங்களில் இரண்டாவது வெள்ளிக்கிழமை ரேஷன் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதில் புதிய மற்றும் மாற்று கார்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால் மக்கள் அலைக்கழிப்பு செய்வது தடுக்கப்படுவதுடன் அந்த கார்டுகளில் திருத்தங்கள் இருந்தால் அவை உடனடியாக முகாமில் சரிசெய்து தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X