பொது செய்தி

தமிழ்நாடு

வீடு முன் தண்ணீர் பந்தல்; பொதுஜனம் தாராளம்

Added : மே 16, 2019
Advertisement

காஞ்சிபுரம்: கோடை வெயிலில், சாலையில் செல்லும் மக்களின் தாகத்தை தீர்க்க, வீட்டின் முன் ஒருவர்,தண்ணீர் பந்தல் அமைத்து, குடிநீர் வழங்கி வருகிறார்.வழக்கமாக, கோடை காலத்தில் அரசியல் கட்சியினர், சுயவிளம்பரத்திற்காக ஆங்காங்கே, தண்ணீர் பந்தல் திறப்பர். சில நாட்களில் தண்ணீர் பானையே காணாமல் போய் விடும்.ஆனால், காஞ்சிபுரம் ராகவேந்திரா நகர் பகுதியை சேர்ந்த, ப.ஜெயபிரகாஷ், 36, என்ற கட்டட பொறியாளர், வீடு முன் சிறிய பந்தல் அமைத்து, அந்த வழியாக செல்வோருக்கு குடிநீர் வசதிசெய்துள்ளார்.ப.ஜெயபிரகாஷ் கூறியதாவது:தண்ணீர் கொடுப்பதில் எனக்கு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. தினமும் காலையில் பாலாற்று தண்ணீர் பிடித்து வந்து, மண் பானையில் ஊற்றி வைக்கிறேன். பலர் ஆர்வமாகஅருந்துகின்றனர்.மோர் கொடுக்கலாம் என்று தான் முதலில் நினைத்தேன். தொடர்ந்து தானமாக வழங்க வேண்டும் என்பதால், தண்ணீர் வழங்குவது என முடிவுசெய்தேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X