பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோர நிலத்தை அபகரிக்கும் தரகர்கள்

Added : மே 16, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மாமல்லபுரம்: நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு, அரசு கையகப்படுத்த உள்ள தனியார் இடங்களை அறிந்து, சம்பந்தப்பட்டோரிடம் கூடுதல் விலைக்கு, ரியல் எஸ்டேட் தரகர்கள் சிலர், நிலங்களை பெறுகின்றனர்.

மாமல்லபுரம் - புதுச்சேரி கடலோர சாலை, இருவழி பாதையாக உள்ளது. இதை, நான்கு வழிப்பாதையாக மேம்படுத்த, தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்காக, சம்பந்தப்பட்ட நிலங்களில், அடையாள கற்கள் நடப்பட்டு வருகின்றன.இச்சாலை விரிவாக்கத்திற்கு, நிலம் கையகப்படுத்த உள்ள புல எண் பகுதிகள் குறித்தும், அதன் உரிமையாளர்கள் குறித்தும், தமிழ், ஆங்கில நாளிதழ்களில், அவ்வப்போது விளம்பரம் வெளியிடப்படுகிறது.இதை கவனிக்கும், ரியல் எஸ்டேட் தரகர்கள் உட்பட சிலர், நாளிதழ்களில் வெளியிடப்படும் அறிவிப்புகளை பார்த்து, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களை அணுகுகின்றனர்.அரசு கையகப்படுத்த உள்ள நிலத்திற்கு, சந்தை மதிப்பை விட, இரு மடங்கு கூடுதலாக விலை தருவதாக உறுதியளிக்கின்றனர். குறிப்பிட்ட தொகையை கொடுத்து, நில பத்திரத்தை, அந்த தரகர்கள் தங்களுக்கு கிரயம் செய்து கொள்கின்றனர்.கிழக்கு கடற்கரை சாலை பகுதி, புதுப்பட்டினம், வாயலுார், காத்தங்கடை, கூவத்துார், முகையூர், பரமன்கேணி, கடப்பாக்கம், வெண்ணாங்குப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், இத்தகைய முறைகேடு அதிகரித்து உள்ளது.அரசு வழிகாட்டு மதிப்பு, முக்கிய பகுதிகளில், அதிகம்; சில பகுதிகளில் குறைவு. அதற்கேற்ப, 1 சென்ட் நிலம், 16 - 32 ஆயிரம் ரூபாய் வரை, விலை பேசி வாங்கு கின்றனர்.விட்டிலாபுரத்தில், 1 சென்ட், 16 ஆயிரம் ரூபாய்; கூவத்துார், கடலுார், முகையூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், 1 சென்ட், 32 ஆயிரம் ரூபாய் என, அவர்களே விலை நிர்ணயிக்கின்றனர்.பத்திரப்பதிவையும், அப்பகுதி சார் - பதிவாளரிடம் பதியாமல், நிலத்திற்கும், கூடுதல் மதிப்பு நிர்ணயித்து, காஞ்சிபுரத்தில் பதிகின்றனர்.இது குறித்து, ரியல் எஸ்டேட் தரகர்களிடம் நிலத்தை, குறைந்த விலைக்கு விற்ற சிலர் கூறியதாவது:அரசிடம் நிலம் கொடுத்தால், நஷ்டஈடு வாங்க காத்திருக்க வேண்டும். எங்களை அணுகியவர்கள், மார்க்கெட் மதிப்பை விட, இரு மடங்கு கூடுதலாக கொடுத்ததால், நாங்கள் பணத்தை வாங்கி, நிலத்தை, அவர்களுக்கு எழுதி கொடுத்து விட்டோம்.நிலத்தை, அரசு கையகப்படுத்தும் போது, அவர்கள் வழக்கு தொடுத்து, எங்களுக்கு கொடுத்ததை விட, அதிக தொகையை நஷ்ட ஈடாக பெறுவர் என, கூறப்படுகிறது.இப்பகுதிகளில், பெரும்பான்மை நிலத்தை, தரகர்களே வாங்கியுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இந்த முறைகேட்டை தடுக்க, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நிலம் கையகப்படுத்த, அரசு அறிவித்ததுமே, அறிவித்த பின் நிலத்தை விற்கவோ, வாங்கவோ கூடாது என, தடை விதிக்க வேண்டும். அதிக நஷ்டஈடு பேராசையாக, பலர், நிலம் வாங்கியுள்ளனர். இவர்களால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
17-மே-201916:45:56 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj மாமல்லபுரம் பற்றிய செய்தி வெளிப்படையாக வெளிவருகிறது ஆனால் காஞ்சிபுரம் நகரில் உள்ள மாமல்லன் நகர் மின்னகர் ஆக்கிரமிப்புகள் மட்டும் மறைக்கப்படுவதன் இரகசியம் என்ன
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X