பொது செய்தி

தமிழ்நாடு

பழமையான கருங்குழி கோட்டை தொல்லியல் கவனிப்பு இல்லை

Added : மே 16, 2019
Advertisement

கருங்குழி : கருங்குழியில் உள்ள பழமை வாய்ந்த கோட்டையை சீரமைத்து, வரலாற்று சிறப்புகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள வழி செய்ய வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்திலிருந்து சென்னை மார்க்கத்தில், 2 கி.மீ.,யில் கருங்குழி உள்ளது. இப்பகுதியில் நிறைய அரிசி ஆலைகள் உள்ளன.மேலும், வரலாற்று சிறப்பு மிக்க புராதனக் கோட்டை ஒன்றும் இங்குள்ளது. முகமதியர் கோட்டை என்றழைக்கப்படும் இது, 17ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது. தற்போது, முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

கருங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, தற்போது புதர் மண்டி காடாகக் காட்சியளிக்கிறது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இப்பகுதி இருப்பதாகக் கூறப்பட்டாலும், முறையாகப் பராமரிக்கப்படாமல் வீணாகிக் கிடக்கிறது.இதன் வரலாற்று உண்மை மற்றும் பெருமையை, அனைவரும் அறிந்து கொள்ள, தொல்பொருள் ஆய்வுத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துாங்கும் தொல்லியல் துறை?
பழம்பெரும் வாய்ந்த இந்த கோட்டை, அன்னியர் படையெடுப்பால் சிதைந்து போயுள்ளது போல காணப்படுகிறது. இதை கட்டியது யார்; எந்த காலத்தில் இங்கு ஆட்சி நடந்தது; இதன் வாரிசுகள் யாரேனும் உள்ளனரா என்ற விபரம், இங்குள்ள தொல்லியல் துறையினருக்கே தெரியவில்லை.இந்த கோட்டையில் பெயர் கூட, இங்கிருப்பவர்களுக்கு தெரியாத வகையில், தொல்லியல் துறை, இதை பராமரிக்கிறது. இதுபோன்ற ஒரு கோட்டை மற்றும் அதன் சிதிலங்கள், பிற நாடுகளில் இருந்தால், அதன் வரலாற்றுச் சிறப்பை விளக்கி, சுற்றுலா பயணியரை ஈர்த்து விடுகின்றனர்.ஆனால், நம் நாட்டில், கண் எதிரே ஒரு கோட்டை சீரழிந்து கிடக்கிறது. அதன் வரலாறு, அருகில் வசிப்பவர்களுக்கு கூட தெரியவில்லை என்பது, தொல்லியல் துறையின் லட்சணத்தை காட்டுகிறது என, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X