பொது செய்தி

தமிழ்நாடு

கோவில், 'ஏசி' இயந்திரம் பழுதால் பக்தர்கள் அவதி

Added : மே 16, 2019
Advertisement

திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மூலவர் மண்டபம் அருகே பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள, 'ஏசி' இயந்திரம் பழுதடைந்துள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

இக்கோவிலில், பக்தர்களின் வசதிக்காக, பக்தர் ஒருவர் நன்கொடையாக, பெரிய அளவிலான, 'ஏசி' இயந்திரத்தை, மூலவர் மண்டபம் அருகே அமைத்துள்ளார்.இதனால், கடும் கோடையில், பக்தர்களுக்கு சற்று இதமான சுவாமி தரிசனம் கிடைத்து வந்தது. இந்நிலையில், முறையான பராமரிப்பின்றி, 'ஏசி' இயந்திரம் பழுதாகி விட்டது.இதை கோவில் நிர்வாகம் கவனித்தும், பல நாட்களாக சரி செய்யாமல் உள்ளது. தற்போது கோடை தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள், அவதிக்கு உள்ளாகின்றனர்.இது குறித்து பக்தர்கள் கூறுகையில், 'மூலவர் மண்டபத்தின் மேல் பகுதியில் காற்று செல்வதற்காக, 'வி' வடிவிலான இரண்டு துளைகள் இருந்தன. கடந்த கும்பாபிஷேகத்தின் போது, அதை அடைத்து விட்டனர். இதனால், காற்று வரும் பாதை தடைப்பட்டுஉள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X