அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கமலுக்கு முன்ஜாமின் கிடைக்குமா:
தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரை:'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர்தான் நாதுராம் கோட்சே,' என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

 கமலுக்கு,முன்ஜாமின்,கிடைக்குமா,தீர்ப்பு,ஒத்திவைப்பு



மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து, மே 12ல் பள்ளப்பட்டி அண்ணாநகரில் பிரசாரம் செய்தார். அப்போது,'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர்தான் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு'கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என நினைத்துக் கொள்ளுங்கள்,' என கமல்ஹாசன் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, ஹிந்து மதத்திற்கு அவதுாறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்தது.


கரூர் மாவட்ட ஹிந்து முன்னணி செயலாளர் ராமகிருஷ்ணன், அரவக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். மதக்கலவரத்தை துாண்டும் வகையில் பொது இடத்தில் பேசியதாக கமல்ஹாசன் மீது வழக்குப் பதியப்பட்டது. அவர் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: 'காந்தியை ஏன் கொன்றேன்' என்ற புத்தகத்தில், 'ஹிந்துக்களுக்கு எதிராக காந்தி செயல்பட்டார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்திதான் காரணம்,' என நாதுராம் கோட்சே தெரிவித்துள்ளார்.' நான் நாதுராம் கேட்சே பற்றிதான் பேசினேன்.



ஹிந்துக்களுக்கு எதிராக பேசவில்லை. எனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை. மத

ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேச வில்லை. எனது நாக்கை துண்டிக்க வேண்டும் என மாநில அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். எனக்கு அச்சுறுத்தல் உள்ளது. தவறாக என்னை வழக்கில் சேர்த்துள்ளனர்.முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் மனு செய்தார்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.


மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர்: மனுதாரர் மே 12 ல் அரவக்குறிச்சியில் பேசியுள்ளார். ஆனால், தாமதமாக மே 14 மாலையில் புகார் அளிக்கப் பட்டு உள்ளது. மனுதாரர் பேசியதன் விளைவாக எவ்வித பதட்டமும் ஏற்படவில்லை. அசம்பாவிதமும் நடக்கவில்லை. புகார்தாரர் ஒருதலைப்பட்சமாக புகார் அளித்துள்ளார். புகாரில் எவ்வித பொதுநலனும் இல்லை. மனுதாரர் இதுவரை பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்துள்ளார்.



தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது எவ்வித வழக்கும் பதியப்படவில்லை. இவ்விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தல் கமிஷன்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.


மாநில அரசு குற்றவியல்வழக்கறிஞர்: தேர்தல் நடத்தை விதிமுறைகள்படி எவ்வித மதம், ஜாதி உணர்வை துாண்டும் வகையில் பேசக்கூடாது. அதை மீறி மனுதாரர் உள்நோக்குடன், கலவரத்தை துாண்டும் வகையில் பேசியுள்ளார். இதனால் சட்டம்-ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மனுதாரருக்கு சம்மன் அனுப்பி துவக்க கட்ட விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
அதன் பிறகுதான் மனுதாரர் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்படும். தற்போதைய சூழ்நிலையில் கைது செய்யப்படலாம் என மனுதாரர் அச்சப்படத் தேவையில்லை. அதற்குரிய முகாந்திரமும் தற்போது எழவில்லை. முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.


புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுதாரருக்கு முன்ஜாமின் அனுமதிக்கக்கூடாது,' என எதிர்ப்புத் தெரிவித்தார்.மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார்,'ஓட்டு வங்கியை மையப்படுத்தி, இரு மதங்களுக்கு இடையே பிரிவினையைத் துாண்டும் வகையில் கமல்ஹாசன் பேசியுள்ளார். அவர் அடிக்கடி ஹிந்து பாரம்பரியத்தை விமர்சித்து பேசுகிறார். கோட்சேயின் சித்தாந்தம் வேறு. காந்தியின் சித்தாந்தம் வேறு. தீவிரவாதி என்பவர்

Advertisement

பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்திவிட்டு, தற்கொலை செய்வார் அல்லது தப்பித்து ஓடுவார்.



காந்தியை சுட்டுக்கொன்றதும் கோட்சே தப்பி ஓடவில்லை. தன்னையும் வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும். மனுதாரருக்கு முன்ஜாமின் அனுமதிக்கக்கூடாது,' என மனு செய்தார். கமல்ஹாசன் பேசிய வீடியோ ஆதாரம் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது. அதை அலைபேசியில் நீதிபதி சிறிது நேரம் பார்த்தார். தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி, ''மனுதாரரின் பேச்சு தொடர்பாக இதுவரை 76 புகார்கள் செய்யப்பட்டுள்ளன.



மனுதாரர் தான் அரவக்குறிச்சியில் பேசியதை நியாயப்படுத்தியுள்ளார். அது இன்றைய நாளிதழ்களில் வெளியாகியுள்ளது. மனுதாரரின் சர்ச்சைக்குரிய பேச்சு பற்றி தேர்தல் முடியும்வரை மனுதாரரும், வேறு யாரும் ஊடகங்களில் விவாதிப்பதை தவிர்க்க வேண்டும்,' என கருத்தை வெளியிட்டார்.

கமல் பிரசாரத்திற்கு தடை கோரி முறையீடு

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.தண்டபாணி அமர்வு முன் வழக்கறிஞர் எம்.சரவணக்குமார் ஆஜரானார். அவர்,''ஹிந்து மத உணர்வை புண்படுத்தும் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் கமல்ஹாசன் பேசியுள்ளார். அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்கும் வகையில் அவசர மனுவாக ஏற்று, விசாரிக்க வேண்டும்,'' என முறையிட்டார். நீதிபதிகள், 'தேர்தல் கமிஷனை அணுகி நிவாரணம் பெறலாம்,' எனக்கூறி நிராகரித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.sankar_ - chennai,இந்தியா
18-மே-201916:50:00 IST Report Abuse

m.sankar_கமல் நீ ஒரு கீழ்த்தரமான மனிதன். உன் கீழ்த்தரமான வாழ்கை உன் உனக்கு பழகிவிட்டது.

Rate this:
Ambika. K - bangalore,இந்தியா
17-மே-201915:00:46 IST Report Abuse

Ambika. K

Rate this:
V.B.RAM - bangalore,இந்தியா
17-மே-201911:44:26 IST Report Abuse

V.B.RAMஉன்னை கைது செய்தால் உன் கடந்தகால மனைவிகள் கூட எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள்.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X