பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது

Added : மே 16, 2019
Advertisement

காஞ்சிபுரம் : செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, '108' ஆம்புலன்சில், கர்ப்பிணியை அழைத்து செல்லும் வழியில், ஆண் குழந்தை பிறந்தது.

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி காஞ்சனா, 25. இவருக்கு, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான காஞ்சனாவுக்கு, நேற்று காலை, பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், உறவினர்கள், அவரை சேர்த்தனர்.அங்கு, பரிசோதனை செய்த டாக்டர்கள், செங்கல்பட்டு மருத்துவமனைக்கு, காஞ்சனாவை அழைத்து செல்லும்படி, பரிந்துரை செய்தனர். இதையடுத்து, '108' ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஓட்டுனர் ஆயியப்பன், 28, மருத்துவ உதவியாளர் சுரேந்தர், 30, வந்தனர்.பின், ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட காஞ்சனாவுக்கு, செங்கல்பட்டு அருகே வில்லியம்பாக்கம் செல்லும் போது, பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதையடுத்து ஓட்டுனர், சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தவும், மருத்துவ உதவியாளர் சுரேந்தர், பெண்ணின் உறவினர் உதவியுடன் பிரசவம் பார்த்தார்.சிறிது நேரத்தில், காஞ்சனாவுக்கு, சுக பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தாயும் - சேயும் சேர்க்கப்பட்டு நலமுடன் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X