பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி மலர் கண்காட்சி இன்று துவக்கம்

Added : மே 16, 2019
Advertisement
ஊட்டி மலர் கண்காட்சி  இன்று துவக்கம்

ஊட்டி ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி துவங்குகிறது. சுற்றுலா பயணியருக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சி இன்று துவங்கி 21ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணியரை கவர தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.பூங்காவின் பெரணி இல்லம் அருகே கார்னேஷன் மலர்களால் பார்லிமென்ட் வடிவம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு 2 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் மலர்களால் ஆன பார்லிமென்ட் கட்டடம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.நுழைவு கட்டணம்: மலர் கண்காட்சி நாட்களில் நுழைவு கட்டணமாக பெரியவர்கள் 50 ரூபாய்; சிறுவர் 20; கேமரா 100; வீடியோ கேமரா 500 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X