பொது செய்தி

தமிழ்நாடு

வரத்து அதிகரிப்பால் மாம்பழ பிரியர்கள், 'குஷி'

Added : மே 16, 2019
Advertisement

திருவொற்றியூர் : சீசன் காரணமாக, மாம்பழ வரத்து அதிகரித்துள்ளதால், மாம்பழ பிரியர்கள் குஷியடைந்துள்ளனர்.

கோடை என்றாலே, சீசன் உணவுகளின் வரத்து அதிகமாக இருக்கும். மாங்காய், நுங்கு, முந்திரி பழம், கிர்ணி, தர்ப்பூசணி என, உணவு பிரியர்களின் பட்டியல், நீண்டு கொண்டே செல்லும்.அந்த வகையில், மாம்பழம் சீசன் காரணமாக, திருவொற்றியூர், மணலி, மணலிபுதுநகர், எண்ணுார் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடை வீதிகள், மார்க்கெட்டுகளில், மாம்பழம் குவியல் குவியலாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.ஆந்திராவை ஒட்டிய பகுதி என்பதால், திருவள்ளூரின் வடக்கு பகுதியான, ஆரம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து, மாம்பழம் வரத்து இருக்கும்.கோயம்பேடு சந்தையில் இருந்தும், மாம்பழங்கள் வாங்கி வந்து, விற்பனை செய்யப்படுகின்றன. ஜவ்வாரி, ருமானி, பங்கனபள்ளி போன்ற மாம்பழ வகைகள், அதிகளவில், கூறு கட்டி விற்பனை செய்யப்படுகின்றன.பெரிய அளவிலான மாம்பழங்கள், 6 - 8 எண்ணிக்கையிலான கூறு ஒன்று, 200 ரூபாய்; அதற்கடுத்த அளவில் உள்ள மாம்பழங்கள், 4 - 5 எண்ணிக்கையிலான கூறு, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தவிர்த்து, தனியே ஒரு பழத்தின் விலை, 20 - 40 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விற்கப்படுகிறது. கிலோ கணக்கிலும், மாம்பழங்கள் விற்பனையாவதை பார்க்க முடிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X