பொது செய்தி

தமிழ்நாடு

13 இடங்களில் புதிய மேம்பாலங்கள்; போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தில் பரிந்துரை

Added : மே 16, 2019
Advertisement

சென்னை பெருநகர் பகுதியில், 2048 வரையிலான காலத்தில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களில், 13 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் பகுதியில், போக்குவரத்து மேம்பாட்டுக்கான செயல் திட்டங்களை உருவாக்கும் பணிகள், நடந்து வருகின்றன.சி.எம்.டி.ஏ., சென்னை மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு துறைகளும், அரசு சாரா அமைப்புகளும், இதில் ஈடுபட்டுள்ளன.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 2048 வரையிலான காலத்தில், போக்குவரத்தில் ஏற்படும் வளர்ச்சி, மாற்றங்கள் தொடர்பான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.இந்த மதிப்பீடு அடிப்படையில், தேவைப்படும் புதிய திட்டங்களும், இதற்கான அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதில், நடைபாதைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களுடன், நான்கு முனை சந்திப்புகள், குறுகலான வளைவுகள் உள்ள சாலைகளை, மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.இத்துடன், இரண்டு வழிச் சாலைகளை, நான்கு வழிச் சாலைகளாக மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, சென்னை பெருநகரில், மேம்பாலம் அமைக்க வேண்டிய, 13 சாலை சந்திப்புகள் குறித்த விரிவான ஆய்வு முடிவுகள், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதில், பரிந்துரைக்கப்பட்டுள்ள இடங்களில், பல்லாவரம், ஜி.எஸ்.டி., சாலையில் மட்டும், தற்போது மேம்பால பணி நடந்து வருகிறது.புதிய மேம்பாலம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள சாலை சந்திப்புகள்:

கத்திவாக்கம் நெடுஞ்சாலை - தண்டையார்பேட்டை சாலைதிருவொற்றியூர் நெடுஞ்சாலை - கத்திவாக்கம் நெடுஞ்சாலைமணலி நெடுஞ்சாலை - எண்ணுார் நெடுஞ்சாலைசர்தார் பட்டேல் சாலை - வேளச்சேரி சாலைஆவடி பூந்தமல்லி சாலை - பூந்தமல்லி டிரங்க் சாலைசி.டி.எச்., சாலை - செங்குன்றம் சாலைகாளியம்மன் கோவில் தெரு - எம்.ஜி.ஆர்., சாலைஎண்ணுார் விரைவு சாலை - மணலிஆயில் ரிபைனரி சாலைஜவஹர்லால் நேரு சாலை - டி.பி.பி., சாலைசெங்குன்றம் - திருவள்ளூர் சாலைபம்மல் பிரதான சாலை - ஜி.எஸ்.டி., சாலைஅண்ணாசாலை - சர்தார் படேல்சாலை சந்திப்புஅண்ணா சாலை - ஆலந்துார், எம்.கே.என்., சாலை சந்திப்பு
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X