பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் முனைவோருக்கு 30 நிமிடத்தில் ரூ.26 லட்சம் கடன்

Added : மே 16, 2019
Advertisement
தொழில் முனைவோருக்கு 30 நிமிடத்தில் ரூ.26 லட்சம் கடன்

திருப்பூர் திருப்பூரை சேர்ந்த தொழில் முனைவோர் ஒருவர் 26 லட்சம் ரூபாய்க்கான கடன் அனுமதியை 30 நிமிடத்தில் பெற்று அதிநவீன டிஜிட்டல் பிளேட் மேக்கிங் மெஷினை இறக்குமதி செய்து தன் நிறுவனத்தை மேம்படுத்தியுள்ளார்.சிறு குறு நடுத்தர தொழில் முனைவோருக்காக பிரதமர் மோடி 2018 நவம்பர் 2ல் 59 நிமிட வங்கி கடன் திட்டத்தை அறிவித்தார்.திருப்பூர் பி.என். ரோட்டில் 'லேபிள் பிரின்டிங் பிளேட்' தயாரிப்பு நிறுவனத்தை ஆனந்த்குமார் என்பவர் நடத்தி வந்தார். பழமையான தொழில்நுட்பத்தில் லேபிள் டிசைன்கள் எழுத்துகளை பிலிமில் பதிய வைத்து 'எம்போசிங்' மூலம் பிளேட்டில் பொறித்து வந்தனர்.அதிநவீன மெஷின் வாங்குவதற்காக 2018 நவம்பர் 30ல் 59 நிமிட திட்டத்தில் 30 லட்சம் ரூபாய் கடன் கேட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆனந்த்குமார் விண்ணப்பித்தார். உரிய ஆவணங்களை சமர்ப்பித்த அவருக்கு 30 நிமிடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26 லட்சம் ரூபாய் கடன் தொகையை வங்கி விடுவித்துள்ளதுஇதை பயன்படுத்தி சீனாவிலிருந்து அதிநவீன டிஜிட்டல் பிளேட் மேக்கிங் மெஷினை இறக்குமதி செய்து நிறுவியுள்ளார்.பழைய நடைமுறையில் தயாரிக்கப்படும் பிளேட்கள் மூலம் அதிகபட்சம் 1 லட்சம் பிரின்டிங் செய்ய முடியும். நவீன டிஜிட்டல் பிளேட்கள் மூலம் 5 லட்சம் பிரின்டிங் வரை பொறிக்கலாம்.ஆனந்த் குமார் கூறியதாவது: திருப்பூர் நிறுவனங்கள் லேபிள் பிரின்டிங்கிற்கான டிஜிட்டல் பிளேட் உருவாக்குவதற்கு சென்னை பெங்களூரு நகரங்களையே நாட வேண்டியுள்ளது. இதனால் ஏராளமான சிரமங்களை தொழில் துறையினர் சந்திக்கின்றனர்.சில தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற முயற்சித்தும் அதிகபட்சம் 16 லட்சம் ரூபாய் வரை மட்டும் கடன் வழங்க முன்வந்தனர். 13 சதவீதம் வட்டி என்றனர். பிரதமர் அறிவித்த 59 நிமிட திட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்தேன். எல்லா ஆவணங்களையும் வழங்கினேன். எவ்வித பிணையமும் இன்றி 26 லட்சம் ரூபாய் கடன் கிடைத்து விட்டது.வேறு நிறுவனங்களில் கடன் வாங்கினால் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டியது கட்டாயம். மாதம் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டும். கடனை திருப்பிச் செலுத்த 10 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்குவதாக தெரிவித்தனர். மாதம் 43 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். எளிதாக கடனை திருப்பி செலுத்தி விடுவேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X