பொது செய்தி

தமிழ்நாடு

ரஷ்ய துாதரக கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல்

Added : மே 16, 2019
Advertisement

சென்னையில், ரஷ்ய துணை துாதரக அலுவலகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட, மூன்று அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலை, சி.எம்.டி.ஏ., அனுப்பி உள்ளது.

சென்னை, மயிலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலையில், ரஷ்ய நாட்டு துணை துாதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்திலும், தேனாம்பேட்டை, செனடாப் சாலை வளாகத்திலும், மூன்று அடுக்குமாடி கட்டுமான திட்டங்களை மேற்கொள்ள, துாதரக நிர்வாகம் முடிவு செய்தது.இதற்காக திட்ட அனுமதி கோரியும், சில இடங்களில், வரன்முறைக்கான அனுமதி கோரியும், துாதரக நிர்வாகம், தமிழக அரசிடம் விண்ணப்பித்தது.

துாதரக கட்டடங்களுக்கான சிறப்பு சலுகை மற்றும் நகரமைப்பு சட்ட விதிகளின் அடிப்படையில், இந்த விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்க, அரசு முடிவு செய்தது.இதற்கான நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முடித்துள்ளனர். இதையடுத்து, கட்டுமான திட்டங்களுக்கான ஒப்புதல் குறித்த அறிக்கை, துாதரக அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X