பொது செய்தி

தமிழ்நாடு

414 புதிய வாடகை குடியிருப்புகள் வீட்டு வசதி வாரியம் விறுவிறுப்பு

Added : மே 16, 2019
Advertisement

சென்னை, தேனி, விருதுநகர், அரியலுார் மாவட்டங்களில் அரசு ஊழியர்களுக்காக 414 புதிய வாடகை குடியிருப்புகள் கட்டும் பணிகளை வீட்டுவசதி வாரியம் துவக்க உள்ளது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மனைகள் குடியிருப்பு திட்டங்களை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதில் வாரிய நிதியிலும் சுயநிதி முறையிலும் குடியிருப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. வாடகை அடிப்படையிலும் வீட்டுவசதி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் மட்டுமே அரசு ஊழியர்களுக்கான புதிய வாடகை குடியிருப்புகள் கட்டப்படுகின்றன; பிற மாவட்டங்களில் கட்டப்படவில்லை என கூறப்பட்டு வந்தது.இந்நிலையில் தேனி விருதுநகர் அரியலுார் மாவட்டங்களில் புதிய வாடகை குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக அரசு அறிவுறுத்தலில் தேனியில் 24.10 கோடியில் 120 வீடுகள்; விருதுநகரில் 49.64 கோடியில் 222 வீடுகள்; அரியலுாரில் 18.60 கோடி ரூபாயில் 72 வீடுகள் புதிதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் அந்தந்த கோட்ட அலுவலகங்கள் வாயிலாக நடந்து வருகின்றன.அடுத்த சில ஆண்டுகளில் இந்த வீடுகள் அரசு ஊழியர்களின் பயன்பாட்டுக்கு வரும். இதுதவிர புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வேறு சில மாவட்டங்களிலும் அரசு ஊழியர்களுக்கான வாடகை வீடுகள் கட்டுவதற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X