பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறல் கட்டடத்துக்கு ஜூன் 30 வரை அவகாசம்

Added : மே 16, 2019
Advertisement

சென்னை, பள்ளிக்கரணை பகுதியில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, 'சீல்' வைப்பு நடவடிக்கையை, ஜூன், 30 வரை நிறுத்தி வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பள்ளிக்கரணை, ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் நகர் பகுதியில், ஒரு நில உரிமையாளர், முறையான அனுமதி பெறாமல், கட்டுமான திட்டத்தை செயல்படுத்தி வந்தது, மாநகராட்சி ஆய்வில் தெரிய வந்தது.இதையடுத்து, அந்த கட்டடத்துக்கு, 'சீல்' வைக்க, மாநகராட்சி அதிகாரிகள், 2018 நவ., 22ல், 'நோட்டீஸ்' அனுப்பினர்.இதையடுத்து, அந்த நில உரிமையாளர், அரசிடம் மேல் முறையீடு செய்தார். இதில், நிலத்துக்கு பட்டா இல்லாதது தெரியவந்தது.அந்த நிலத்துக்கு பட்டா பெற்று, முறையான திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்க, மூன்று மாதம் அவகாசம் அளித்து, தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை, ஜன., 11ல் உத்தரவிட்டது. ஆனால், நில உரிமையாளர், பட்டா பெற, ஆறு மாத காலம் அவகாசம் கோரினார்.

இது தொடர்பாக, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை, சி.எம்.டி.ஏ., மற்றும்மாநகராட்சி அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:சம்பந்தப்பட்ட நில உரிமையாளர், பட்டா பெறுவதற்கும், முறையாக திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்கவும், ஜூன், 30 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அமலாக்க நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கலாம்.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதை கருத்தில் வைத்து, இந்த கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முறையான திட்ட அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடத்துக்கு, தற்போது வழங்கப்பட்ட இச்சலுகை, அனைத்து கட்டட உரிமையாளர்களுக்கும் வழங்கப்படுமா என, நகரமைப்பு வல்லுனர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X