பொது செய்தி

தமிழ்நாடு

கிராம வாரியாக மண்பரிசோதனை 15 நாட்களில் முடிக்க உத்தரவு

Added : மே 16, 2019
Advertisement

சென்னை, 'மாநிலம் முழுவதும் கிராம வாரியாக நடந்து வரும் மண் பரிசோதனை பணிகளை 15 நாட்களில் முடிக்க வேண்டும்' என வேளாண்துறை உத்தரவிட்டுள்ளது.மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளும் அவற்றின் கீழ் ஏராளமான வருவாய் கிராமங்களும் உள்ளன. மத்திய அரசின் நீடித்த நிலையான வேளாண்மை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்வள அடையாள அட்டை வழங்கப்படுகிறது.ஒவ்வொரு கிராமத்தின் மண் வளத்தையும் கண்டறிந்து அதற்கேற்ப பயிர்கள் சாகுபடி செய்வது தேவையான உரங்களை மட்டுமே பயன்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கம்.மாநிலம் முழுவதும் வறட்சி காரணமாக சாகுபடி குறைந்துள்ளதால் வேளாண் துறையினரின் பணிச்சுமையும் குறைந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிராம வாரியாக மண்வளத்தை கண்டறியும் ஆய்வை வேளாண்துறை துவக்கியுள்ளது. இப்பணிகளை 15 நாட்களில் முடிக்க அந்தந்த மாவட்ட வேளாண்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகளின் நிலங்களில் ஒன்றரை அடியில் ஒரு மண் பரிசோதனையும் இரண்டரை அடியில் ஒரு மண் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்றரை அடியில் பரிசோதனை செய்யப்படும் இடங்களில் வேளாண் பயிர்களும் இரண்டரை அடியில் பரிசோதனை நடக்கும் இடங்களில் பழமரங்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களையும் சாகுபடி செய்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் கிராம வாரியாக மண்வள வரைபடம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த வரைபடத்தை அடிப்படையாக வைத்து வரும் காலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம். ஜூனில் தென்மேற்கு பருவமழை துவங்கினால் விவசாயிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டுவர். எனவே அதற்கு முன் இம்மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க உள்ளோம்.இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X