பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்..

Added : மே 16, 2019
Advertisement

சென்னை : 'மாநகராட்சியின் இலவச தொழிற்பயிற்சி படிப்புக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:மாநகராட்சி பள்ளிகளில் படித்து, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மத்திய அரசின், என்.சி.வி.டி., சான்றிதழுடன் கூடிய, தொழிற்பயிற்சி படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவர்கள், மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு, மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.மீதமுள்ள இடங்கள், சென்னை மாவட்டத்தில், பிற பள்ளிகளில் படித்த, ஏழை, எளிய மாணவர்களை, அவ்வப்போது, அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி, சேர்க்கை நடைபெறும்.

தொழிற்பயிற்சி நிலையத்தில், இலவச பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, இலவச சீருடை, பேருந்து பயண அட்டை மற்றும் மாதந்தோறும், 500 ரூபாய் பயிற்சி உதவித்தொகை வழங்கப்படும்.மேலும், இலவச மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.ஒவ்வொரு ஆண்டும், பயிற்சி முடித்தவர்களுக்கு, முன்னணி நிறுவனங்களில், வேலைவாய்ப்பும் பெற்று தரப்படுகிறது.

இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தை, இலவசமாக, சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம், 'இ டிப்போ' லாரி நிலையம் சாலை, முத்தையா தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, ராயப்பேட்டை, சென்னை - 14 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஜூன், 3க்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்த அனைவரும், சேர்க்கைக்காக, ஜூன், 6ம் தேதி காலை, 10:00 மணிக்கு, மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்துக்கு வர வேண்டும்.

கவுன்சிலிங்கில், அனைத்து அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். கவுன்சிலிங்கின் போது, விண்ணப்பதாரரின் மதிப்பெண் தகுதி, தரவரிசை படி மற்றும் அரசு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்து, அன்றே பயிற்சியில் சேர்வதற்கான அனுமதி வழங்கப்படும்.பயிற்சிக்கான வயது வரம்பு, 15 - 40. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. மேலும் விபரங்களுக்கு, 044 - 2847 3117 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X