தமிழர்களை காப்பாற்ற போராடும் ஆஸ்திரேலியர்கள்

Added : மே 17, 2019
Advertisement

கன்பரா, ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இலங்கை தமிழ் குடும்பத்தை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராடுகின்றனர்.இலங்கையை சேர்ந்தவர்கள் நடேஷ் - பிரியா. கடந்த 2012 ல் இலங்கையிலிருந்து அகதிகளாக ஆஸ்திரேலியா வந்தனர். அகதிகள் முகாமில் வாழ்ந்த இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிலொலா எனும் பகுதியில் வசிக்கும் இவர்களுக்கு நான்கு மற்றும் இரண்டு வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் அகதிகள் குடியேற்றத்தை தடை செய்த ஆஸ்திரேலிய அரசு, போதிய ஆவணம் இன்றி வாழும் அகதிகளை வெளியேற்ற முடிவு செய்தது. அதன்படி நடேஷ் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட இருக்கின்றனர். இதை எதிர்த்து பிலோலா நகரவாசிகள், நடேஷ் குடும்பத்தினருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து நடேஷ் குடும்ப நண்பரும், வழக்கறிஞருமான ஏஞ்சலா ப்ரெடரிக், ''நடேஷ் மற்றும் பிரியா எங்களது
நண்பர்கள். இலங்கையில் பல கொடூரங்களை அனுபவித்து தப்பி வந்தவர்கள். அவர்களை திரும்ப இலங்கைக்கு அனுப்புவதை நாங்கள் விரும்பவில்லை. இதற்காக தொடர்ந்து போராடுவோம்,'' என்றார்.ஆஸ்திரேலியாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசு சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X