இலங்கை பயங்கரவாதி மனைவிக்கு முதல் குழந்தை

Added : மே 17, 2019 | கருத்துகள் (1)
Advertisement

கொழும்பு, இலங்கையில் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி முவாத் என்பவரின் மனைவிக்கு மே 5ல் குழந்தை பிறந்தது.இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், ஓட்டல்களில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இத்தாக்குதல்களில் 9 பேர் ஈடுபட்டனர்.இதில் அலாவுதீன் அகமது முவாத் 22,வும் ஒருவர். இவர் கொழும்பு செயின்ட் அந்தோணி தேவாலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார். இவர் சட்டம் படித்தவர்.கொழும்பு நீதிமன்றத்தில் நடக்கும் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிபதிகள் நடத்திய விசாரணையில், முவாத்தின் தந்தை அகமது லபே அலாவுதீன் கூறுகையில், 'சட்ட மேற்படிப்பிற்காக இலங்கை வந்தான். 14 மாதங்களுக்கு முன்பு அவனுக்கு திருமணம் ஆனது. மே 5ல் அவனுக்கு முதல் குழந்தை பிறந்தது. கடைசியாக ஏப்ரல் 14ம் தேதி தான் அவனை பார்த்தேன்' என தெரிவித்தார்.இந்நிலையில் முவாத் தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில், 'என்னை யாரும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். இனிமேல் நான் வரப்போவதில்லை. என் பெற்றோரையும், குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். எனக்காக இறைவனை பிரார்த்தியுங்கள்' என குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் முவாத் இறந்த பின்னரே குடும்பத்தாருக்கு கிடைத்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-மே-201904:41:07 IST Report Abuse
Mani . V
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X