பொது செய்தி

தமிழ்நாடு

நீர்த்தேக்கங்களில் வேகமாக குறைகிறது தண்ணீர்

Added : மே 17, 2019
Advertisement

ராஜபாளையம் : ராஜபாளையம் நகராட்சி பகுதி குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்ய ஒரே ஆதாரமாக விளங்கி வரும் ஆறாவது மைல் பகுதியில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களில் நீரானது வேகமாக குறைந்து வருவதால் இங்கு கோடை தண்ணீர் சப்ளை என்பது கேள்விக்குறியாகி வருகிறது.

ராஜபாளையத்திற்கு மேற்கே 12 கி.மீ .,தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பழையாறு, நீராறு சேர்ந்து அய்யனார் ஆறாக உருவெடுக்கிறது. இதில் தடுப்பணை கட்டி ஆறாவது மைல் தொலைவில் இரண்டு நீர்த்தேக்கங்கள் அமைத்து அதில் ஆற்று நீர் சேமிக்கப்படுகிறது. இந்த நீர்தேக்கங்கள் அருகே நீர்சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு நகராட்சியின் 42 வார்டுகளில் 1 லட்சத்திற்கு மேலான மக்களுக்கு சப்ளை ஆகிறது. 24 அடி கொண்ட நீர்த்தேக்கத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் நீர் வற்றி 6.3 அடி , புதிய நீர்த்தேக்கத்தில் 4.3 அடி நீரே இருப்பு உள்ளது. இருப்பினும் நீர்த்தேக்கங்களை சுற்றிலும் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 11 கிணறுகள் மற்றும் 27 போர் வெல்களில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு சப்ளை தொடர்கிறது. ஏற்கனவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் சப்ளை இருந்த நிலையில் ஒன்பது நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் சப்ளை நடக்கிறது. இத்தகைய பற்றாக்குறையை சமாளிக்க அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ, 192.54 கோடி செலவில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு கடைசியில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பு உள்ளது. இரண்டு ஆண்டுகளுககு முன்பு இது போன்ற வறட்சியில் தனியார் தோப்பு கிணற்று நீரும் இரவும் பகலாக லாரிகள் மூலம் சப்ளை செய்யப்பட்டது. அப்போது தண்ணீருக்காக நகராட்சி அலுவலகத்தை மக்கள் அடிக்கடி முற்றுகையிட்ட நிகழ்வுகளும் நடந்தன. இந்நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க வருண பகவானை நம்புவதை தவிர வேறு வழியில்லை என்கின்றனர் அதிகாரிகள்.ராஜபாளையத்தின் இயற்கையின் கொடையாக இருந்து வரும் அய்யனார் ஆற்றின் நீராதாரமான மேற்கு தொடர்ச்சி மலையில் சாதாரண மழை பெய்தாலே பொது மக்களுக்கு மகிழ்ச்சி தான். மலைச்சரிவுகளில் பெய்யும் மழைநீர் ஓடி தேக்கத்திற்கு ஓரளவு தண்ணீரை கொண்டு வந்துவிடுகிறது. எதிர்பாராத கனமழையால் நீர்த்தேக்கம் நிறைந்தால்தான் ராஜபாளையம் நகர மக்களின் குடிநீர் தேவைக்கு தீர்வு ஏற்படுகிறது.சேமிப்பால் நோய் தொற்றுடெங்கு பாதிப்பினால் ராஜபாளையம் பாதித்தபோது தண்ணீரை நீண்ட நாள் சேமித்து வைத்ததே காரணம் என கூறுகின்றனர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் சப்ளை இருந்தால் தேவையின்றி குடிநீரை பாத்திரங்களில் சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. சப்ளை நாட்கள் அதிகரிப்பது என்பது தேவையற்ற நோய் தொற்றிற்கு மீண்டும் தள்ளி விடுமோ என்ற பயத்தை ஏற்படுத்து விடுகிறது. குறைந்த இடைவெளிகளில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதை நகராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.தனலட்சுமி, குடும்பத்தலைவி, ராஜபாளையம் .விழிப்புணர்வு இல்லையேதேவைக்கு அதிகமாக குடிநீர் கிடைத்த நிலை மாறி தற்போது சப்ளை செய்யப்படும் நாளை மறக்காமல் கேட்டு வீட்டில் காத்திருக்க வேண்டியதாகிறது. ஒரு முறை தண்ணீர் பிடிக்க தவறினாலும் விலைக்கு வாங்க வேண்டி சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. நகர்ப்பகுதியில் பார்க்கும் இடங்களில் எல்லாம் மண்ணை மூடி சிமென்ட் தரையாக மாற்றி நிலத்தடி நீருக்கு வழியில்லாமல் செய்து விட்டனர். மண்ணை தோண்டி கைக்கெட்டிய துாரத்தில் கிடைத்த நிலத்தடி நீரை போர்வெல் மூலம் பூமியின் அடிப்பகுதிக்கு துளையிட்டு தேடுகிறோம். இதற்கான விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும்.அன்னப்பராஜா, வியாபாரி, ராஜபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X