பொது செய்தி

தமிழ்நாடு

நிலத்தடி நீரை உறிஞ்சும் தனியார் நிறுவனங்கள்

Added : மே 17, 2019
Advertisement

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சும் தனியார் நிறுவனங்களால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்படும்.மாவட்டத்தில் நகரில் நிலவி வரும் குடிநீர் பஞ்சம் பொதுமக்களை வாட்டி வருவது போன்று ஊரகப்பகுதிகளிலும் பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கண்மாய்கள், நீர்தேக்கங்களை முறையாக பராமரிக்க தவறியதால் மழைநீர் தேக்கி வைக்காது வீணாகியது. கிணறு, ஊற்று போன்ற நிலத்தடி நீர்மட்டத்தை நம்பி இருக்கும் நீராதாரங்களில் மட்டும் நீர்வரத்து உள்ளது. இது போன்ற நீராதாரங்களில் தனியார் நிறுவனங்கள் பராமரிப்பு, வணிக பயன்பாட்டிற்காக அதிகளவில் நீரை உறிஞ்சுகிறது. இதனால் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் எடுப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். விருதுநகர் மெட்டுக்குண்டு அருகே அரசக்குடும்பன்பட்டியில் தனியார் நிறுவனங்கள் எவ்வித அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. இதை மாவட்ட நிர்வாகமும் கண்டுக்கொள்வதில்லை. இதே போன்றுதான் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து வருகிறது. இதனால் சுற்றுப்பகுதி கிணறு,போர்வெல்களிலும் நீர்மட்டம் குறைகிறது.மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில் விருதுநகர் தாலுகாவின் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளதால் 'ரெட் ஸோன்' ஆக அறிவிக்கப்பட்ட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொய்த்து வரும் பருவமழையால் மாவட்டம் கடும் வறட்சியில் உள்ளது. தனியார் நிறுவனங்கள் வேறு தண்ணீரை அதிகம் உறிஞ்சுவதால் விவசாய பயன்பாடு நீர்நிலைகளும் வற்றிப்போவதால் கிணற்று பாசன விவசாயமும் கேள்விகுறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகமானது கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை காக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தடுக்க வழி காணலாமேகண்மாய்கள், நீர்தேக்கங்களை ஆக்கிரமித்துள்ள கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் எடுத்து வாகனங்கள், மினிலாரிகளில் வினியோகம் செய்பவர்களுக்கு உரிய கட்டுபாட்டு விதிகளை விதிக்க வேண்டும். மானாவாரி பயிர்களை நம்பி பயிரிட்டு வரும் விவசாயிகளுக்கு கிணற்று நீர் பாசனம் மட்டுமே முக்கிய நீராதாரமாக உள்ளது. இங்கு நிலத்தடி நீர் சுரண்டப்படுவதை முற்றிலும் தடுப்பதோடு, இதற்கு காரணமான தனியார் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காசிராஜன், தனியார் ஊழியர், விருதுநகர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X