பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டுநீர் பாசனத்திற்கு மாறும் விவசாயிகள்

Added : மே 17, 2019
Advertisement

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பகுதியில் கடும் தண்ணீர் பிரச்னை காரணமாக விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு சிக்கனமாக தண்ணீர் பாய்ச்ச சொட்டு நீர் பாசனத்திற்கு மாறி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று கிராமங்களில் மழை பொய்த்தும் வறட்சி காரணமாக கடும் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யவில்லை. நீர்நிலைகளிலும் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீரும் வற்றி விட்டது. இதனால் விவசாயம் கேள்விக்குறியாக மாறி விட்டது. பயிர்களை காப்பாற்ற மீண்டும் போர்வெல் போடுகின்றனர். அவற்றில் ஒருசில மாதங்கள் வரை தான் தண்ணீர் வருகிறது. பயிர்களுக்கு முழுமையாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் பலர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி தண்ணீரை சிக்கனமாக பாய்ச்சி வருகின்றனர். வேளாண் துறை மூலம் சொட்டு நீர் பாசனம் செய்ய மானியமும் வழங்கப்படுவது குறிப்பிடதக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X