பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வாகனங்கள் நல்ல கண்டிஷனில் இருக்கா? மாவட்ட அளவில் வரும் 21ல் கூட்டாய்வு

Added : மே 17, 2019
Advertisement

கோவை:'தனியார் பள்ளி பஸ்கள் சரியான நிலையில் உள்ளனவா' என்று சரி பார்க்கும், மாவட்ட அளவிலான கூட்டாய்வு, வரும் 21ம் தேதி கோவையில் நடக்கிறது.கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோவை மையம், கோவை தெற்கு, கோவை வடக்கு, கோவை மேற்கு என 6 வட்டார போக்குவரத்து அலுவலகங்களும், சூலுார், வால்பாறையில் இரண்டு பகுதி அலுவலகங்களும் செயல்படுகின்றன.
இவற்றின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 340 பள்ளிகளும், அவற்றில் மாணவ, மாணவியரை அழைத்துச் செல்வதற்காக, 2,015 வாகனங்களும் உள்ளன.பள்ளி வாகனங்கள், 'தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட சிறப்பு விதிகளின்படி, சரியாக உள்ளனவா' என்று சரி பார்க்கும் கூட்டாய்வு, வரும் 21ம் தேதி கோவையில் நடக்கிறது. மாவட்ட அளவிலான கூட்டாய்வு குழு உறுப்பினர்கள், வாகனங்களை ஆய்வு செய்வர்.கோவை மாநகர எல்லையில் உள்ள கோவை மேற்கு, வடக்கு, தெற்கு, மைய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 1,172 வாகனங்களுக்கு, வரும் 21 அன்று காலை 8:00 மணிக்கு, பாலசுந்தரம் சாலை, பி.ஆர்.எஸ்., மைதானத்தில் கூட்டாய்வு நடக்கிறது.பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட 469 பள்ளி வாகனங்களுக்கு, அலுவலக வளாக மைதானத்தில் கூட்டாய்வு நடத்தப்படுகிறது.மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட, 374 பள்ளி வாகனங்களும் சவீதா மருத்துவமனை அருகேயுள்ள மைதானத்தில் கூட்டாய்வு செய்யப்பட உள்ளன.
கல்வி நிறுவனங்களுக்குகலெக்டர் அழைப்பு'மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும், குறிப்பிட்ட தேதியில் தங்கள் வாகனங்களை ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும்; வாகனங்களுக்குரிய ஆவணங்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பதிவேடு, பள்ளி அளவிலான போக்குவரத்து குழு கூட்டப்பதிவேடு, வாகன குறிப்பேடு ஆகியவற்றுடன் ஆய்வுக்கு வர வேண்டும்' என்று கலெக்டர் ராஜாமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X