அரசியல் செய்தி

தமிழ்நாடு

நேர்மைக்கும், பொறுமைக்கும் நடக்கும் அக்னிப்பரீட்சை: கமல்

Updated : மே 17, 2019 | Added : மே 17, 2019 | கருத்துகள் (60)
Advertisement

சென்னை: 'நடக்கும் சம்பவங்கள் நம் நேர்மைக்கும், பொறுமைக்கும் நடக்கும் அக்னிப்பரீட்சை' என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து 12ல் பள்ளப்பட்டி அண்ணாநகரில் கமல் பிரசாரம் செய்தார். அப்போது 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் தான் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்' என கமல் பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துள்ளனர். இதன்காரணமாக கமல் மீது டில்லி உள்பட பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரூர்-வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற ம.நீ.ம கட்சி பொதுக்கூட்டத்தில் கமல் நேற்று(மே 16) பேசியபோது செருப்பு, முட்டை வீசப்பட்டது. இதே போல் நேற்று முன்தினம்(மே 15) திருப்பரங்குன்றத்தில் நடந்த கமல் கூட்டத்தில், செருப்பு வீசப்பட்டது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து, கமல் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டதாவது: கட்சியனருக்கு கட்சியின் சார்பில் அன்பு வேண்டுகோள். நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் நம் நேர்மைக்கும், பொறுமைக்கும் நடக்கும் அக்னிப்பரீட்சை. எனது பேச்சுக்கு எதிராக நடக்கும் ஆர்பாட்டங்கள், நம்மையும் வன்முறை பாதைக்கு இழுத்து செல்லும். அதற்காக மயங்காதீர்கள். அவர்களின் பயங்கரவாதம் நம் நேர்மைவாதத்திற்கு முன்பு தோற்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S GOPHALA - Chennai,இந்தியா
20-மே-201916:23:04 IST Report Abuse
R S GOPHALA நீங்க கண்டிப்பா இந்த பரீட்சைல்ல தோத்துடுவீங்க. ஏன்னா உங்களுக்கு நேர்மையே கிடையாது. நீங்க ஒரு சந்தர்ப்பவாதி. எடுபடாது.
Rate this:
Share this comment
Cancel
S A Sarma - Hyderabad,இந்தியா
18-மே-201913:15:35 IST Report Abuse
S A Sarma கமலஹாசன் போன்ற ஒரு நேர்மையற்ற மனிதனை யாரும் பார்க்க முடியாது. இவருடைய நேர்மை, இவருடைய அறிவு எல்லாம், இந்து மதத்தை திட்டவும், அதை பற்றி வசை பாடவும் தெரியும். தைரியம் இருந்தால், மற்ற மதத்தைப் பற்றி பேசட்டும். அவருடைய முது எலும்பை எண்ணி விடுவார்கள். காந்தியைப் பற்றி சரித்திரம் வேறு விதமாக எழுதும் காலம் வெகு நாட்கள் இல்லை. இந்தியாவை பிரித்து பாகிஸ்தான் உருவாக்கியது தவறு என்று சரித்திரம் மறுபடியும் எழுதும். இந்த நாடு ஒரு தனி மனிதரால் உருவாக்கப்பட்டது இல்லை. கமலஹாசன் ஒரு பெரிய காந்தியவாதி என்றால், இந்து மதத்தை திட்டி வாக்கு பெற வேண்டிய நிலைமை என்? இவருக்கு இந்து மதத்தை பற்றி என்ன தெரியும் ? இவரைப் போன்ற ஆயிரம் அறிவற்றவர்களையும், அறிவாளிகளையும் பார்த்து உள்ளோம். ராவணன் , ராக்ஷஷர்கள் எல்லோரும் கமலஹாசன் போன்றோர்கள் அதனால், இந்து மதம் கமலஹாசனை தினமும் பார்த்துக் கொண்டுள்ளது
Rate this:
Share this comment
Cancel
பூம்பொழில் - பாலைவனச்சோலை ,எத்தியோப்பியா
17-மே-201913:59:05 IST Report Abuse
பூம்பொழில் ""முதல்தீவிரவாதி""பேட்டி வெளியானதிலிருந்து நேற்றுவரைவெளியான விமர்சனங்களை ஒன்றுவிடாமல் படித்தபின் தூங்கும்போது பலகெட்ட சொப்பனங்கள்.மார்புக்கு நேரே துப்பாக்கி .நிமிர்ந்தால் கட்டைமுறுக்கு மீசையுடன் காக்கி சீருடையில் நாதுராம்கோட்சே.எனக்கு இஷ்டதெய்வங்கள் எதுவும் னினைவு வராததால் ""முதல்தீவிரவாதி""என்று சொன்ன கமல் னினவுக்கு வர தானாக வாய் அதைச் சொல்ல சட்டென்று துப்பாக்கி தாழ்ந்தது.ஆச்சரியத்தில் மூழ்கினன்.கமல் பேரைச் சொன்னால் கோட்சேயே பின்வாங்கும் அளவுக்கு அவர் பெரிய""பாட்ஷா""வா?என வாயடைத்துப் போனேன்.நம் பக்கம் கமல்இருக்கிறார் என்ற துணிச்சலில் கோட்சேயை ஒட்ட ஆரம்பித்தேன்.100 கோடி மக்களின் தேசபிதா ,சுதந்திரம் வாங்கி தந்த தியாகியைச் சுட்டுக் கொன்றவன் அவருடைய மானசீக கொள்ளுபேரன் பெயரைச் சொன்னதுமே னடுங்கினாயா?என்று எகத்தாளமாக சிரித்தேன்.முகம் சுருங்கிய கோட்சே எனக்கு அப்படி யாரையும் தெரியாது என்றான்.திடுக்கிட்ட நான் சற்றுமுன் ""கமல்""என்றவுடன் துப்பாக்கியை தாழ்த்தினாயே?அந்த ""கமல்"" மகாத்மாவின் மானசீக கொள்ளுபேரன் என்றேன்.அதற்கு கோட்சே ""நான் வணங்கும் சரஸ்வதிதேவியின் ஆசனம் கமலமாதலால் அநதபேரை கேட்டவுடன் நீ நம் ஆள் என்று உயிரோடு விட்டேன்"" எனறார்.தூக்கிவாரிப்போட்டது.கடைசியில் நம் தலையெழுத்து இப்படிப்போனதா?என்றவன் ""நான் யாருடைய ஆளுமில்லை.சுதந்திரமானவன்"" .முடிக்குமுன் கோட்சேயின் இடிச்சிரிப்பு. ''இல்லை.னீ ஒரு அடிமை.சுதந்திரம் பெற்றதாக பிதற்றுகிறாய்.உன்னால் இன்னமும் னீ ஒரு இந்து என்றே உர்மைகோர முடியவில்லையே.அப்படி கோரினால் முதல் தீவிரவாதி எனறல்லவா ஆகும் ?''என எதிர்கேள்வி.இந்த கேள்வியை எனனைக்கேட்டால்?கமலிடம்தானே கேகவேண்டும்?மனதில் தோன்றியதை மறைத்துக் கொண்டு ""உங்களைப் போல் எல்லாரையும் அப்படிச் சொலலிவிடுவார்களா?அதெப்படி?""என்றேன். உங்களை எல்லாம்விட மகாத்மாகாந்தியை நான் மதித்ததாலதான் அவரைச் சுட்டேன்""என்றான் கோட்சே. ""இதைவிட வேறு அபத்தம் கிடையாது.இதை நம்பணுமா?""கேட்டுவிட்டு அமைதியானேன். கோட்சே தொடர்ந்தான்.""அஹிம்சை,சத்தியம்.தர்மம் போன்ற உன்னத கோட்பாடுகளைக் கடைபிடித்து உலகுக்கு வழிகாட்டியவர் காந்தி.எவ்வித அப்பழுக்கும் அற்றஅவர் தொடர்ந்து ஜீவித்திருந்தால் இறுதிவரை நேர்மைதவறமாட்டார்.அதுவே அவரை நான்சுட...''நான் இடைமறித்து""அதனால் உமக்கு என்ன?""என்றேன். அவன் பதில்சொன்னான்.""எனக்கு ஒன்றுமில்லை.உம் தேசத்தில் இந்துக்கள் எண்ணிக்கை மட்டும் குறைந்துவரும். ""எப்படி?"" '' சத்தியம்,தர்மம் போன்றவழிகளப் பிரயோகிக்கும்போது துஷ்டர்களை ஒடுக்கியபின் அதைச் செய்யவேண்டும்.இல்லாவிடில் அவற்றினால் துஷ்டர்களின் பலம்தான் ஓங்கும்.நோயைத்தீர்க்காமல் விருந்து உண்டால்?""என்று கேட்டான். ""நீங்கள் கூறியபடி துஷ்டர்களின் பலம் மகாத்மாவின்தர்மவழிகளால் பெருகியதா?"" ""னிச்சயம்.இவர் தொடர்ந்து சகிப்புதன்மையை துஷ்டர்களிடமும் காட்டியதால் அவர்கள் இந்துக்களை கொன்றது தர்மம் என்றுஆகிவிட்டது .மூர்கர்களுக்கு முள்முனையைக் கொண்டு பாடம்கற்பிக்க அவரின் சத்தியாகிரகம் தடையானது.பிரிவினைக்கு அவர் சம்மதிக்காமல் இருந்திருந்தால் சத்தியாகிரகம் உண்மையாய் வென்றிருக்கும்.சம்மதித்ததால் அது தோற்றுவிட்டது""என்றவன் துப்பாக்கி அடிக்கட்டையால் தலையில் அடிக்க திடுக்கிட்டு கண்விழித்தேன்.சேஇப்படி ஒரு கெட்ட சொப்பனமா? என்று வெளியே வந்தபோது ""நடந்ததை எல்லாம் கெட்ட சொப்பனம் என்று மறந்துவிட்டு நாளை நல்லதுனடக்கும் என்று னம்பிக்கையோடு வாழு""என்று ரோட்டில் ஒருவர் புத்திமதி சொல்லிக் கொண்டுபோக,நானும் அதைக் கேட்டுக்கொண்டேன். ""உன்னால் முடியும் தம்பி,நம்பு""
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X