அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல்

Updated : மே 17, 2019 | Added : மே 17, 2019 | கருத்துகள் (196)
Advertisement

சென்னை: நான் கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை, அதே நேரத்தில் என்னை கைது செய்தால் மேலும் பதட்டம் அதிகரிக்கும். கைது செய்யாமல் இருப்பதே நல்லது. ஆகையால் என்னை கைது செய்ய வேண்டாம் என கோரிக்கை விடவில்லை. அறிவுரையாக சொல்கிறேன் என சென்னையில் நிருபர்களிடம் பேசிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறினார்.






அவர் மேலும் கூறியதாவது: கோட்சே குறித்து நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். என்னை போன்றவர்கள் பேசுவதால் மகாத்மாவின் செய்திகள் வெளியே தெரிய வரும். சென்னை மெரினா கடற்கரையில் பேசியதைதானே கூறினேன். இப்போது மட்டும் ஏன் பொங்குகின்றனர் ? இது உருவான சர்ச்சை அல்ல, உருவாக்கப்பட்ட சர்ச்சை.
நான் பேசியதை முழுமையாக கேட்டு பாருங்கள், வாலையும், தலையையும் கத்தரித்து போட்டால், யாரும், யாரையும் குற்றம் சொல்ல தானே முடியும்.

இந்துக்கள் யார், ஆர்எஸ்எஸ் யார் என மக்கள் பிரித்து பார்க்க வேண்டும். புண்படுவது, கோபப்படுவது அரசியல் சாதனங்கள். எனக்கு நல்ல பாதுகாப்பு இருக்கிறது. எனக்கு எதிராக பெரிய கூட்டம் இல்லை. 2 பேர் , நான்கு பேர் என்பதால் பதட்டப்பட வேண்டியது இல்லை.


மோடிக்கு பதில் இல்லை


தீவிரவாதம் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு உங்கள் பதில் என்ன என நிருபர்கள் கேட்டதற்கு; " மதிப்புமிகு பிரதமர் மோடி அவர்கள் ஞானம் அதிகம் கொண்டவர் என்று சொல்கின்றனர். அவருக்கு எல்லாம் தெரியும். இவருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் அவருக்கு பதில் சொல்லும்.






கேள்வி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உங்களின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறியிருக்கிறாரே ?



பதில்: அது அவரது குணாதிசயத்தை காட்டுகிறது.
கேள்வி: உங்களை கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளனரே ?

பதில்: நான் கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை, கைது செய்யட்டும், பிரசாரம் இருக்கிறதே என நினைக்கிறேன். அதே நேரத்தில் என்னை கைது செய்தால் மேலும் பதட்டம் அதிகரிக்கும். கைது செய்யாமல் இருப்பது நல்லது. ஆகையால் என்னை கைது செய்ய வேண்டாம் என கோரிக்கை விடவில்லை. அறிவுரையாக சொல்கிறேன் . இவ்வாறு கமல் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (196)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - chennai,இந்தியா
23-மே-201907:32:41 IST Report Abuse
oce பீதி மையம் பேதி மையம் நாதி மையம் பாதி மையம் மீதி மையம் ஆத்து மையம் மாத்து மையம் அதட்டல் மையம் பதட்டம் மையம் துண்டை காணோம் துணியை காணோம் பினாத்தல் மையம்.
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
22-மே-201915:18:53 IST Report Abuse
Krishnamurthy Ramaswamy ஜெயா லலிதா பல தவறுகள் செய்து இருக்கலாம் ஆனால் அவரது ாலும் திறன் தைர்யம் அறிவு ஈடு இணையற்றது . அவர் பேசிய தமிழ்லில் எத்தனை கம்பீரம் தெளிவு . இந்த சூடாயிக்கை பேசும் தமிழை நம்மால் எனா அவரால் கூட புரிந்து கொள்வது கடினம் . ஜெயா இல்லாத தமிழகத்தில் இப்போது சுடெலிகள் கோட்டம் அடிக்கின்றன . அவர் இருந்திருந்தால் இந்த ஆள் வீதத்தை விட்டே வெளியே வந்திருக்கமாட்டான்
Rate this:
Share this comment
Cancel
Sundar - Chennai,இந்தியா
22-மே-201913:10:40 IST Report Abuse
Sundar மகளுக்கு நிகரானவளை பெண்டாள நினைத்த மாபாதகன் இவன். துணைவியை உடன் இருந்தவளின் மகளை படுக்கைக்கு அழைத்த பாதகன். ஒழுக்கம் இல்லா கயவன். இவன் காந்தியை பற்றி பேசுவது இவன் தஞ்சம் புகுந்த மதத்தில் சொல்வதுபோல சைத்தான் பைபிளை படிப்பது போல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X