பதற்றத்தில் காங்.,: ஸ்மிருதி இரானி தாக்கு

Updated : மே 17, 2019 | Added : மே 17, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement

ஷாஜாபுர் : லோக்சபா தேர்தலில் ஓட்டுக்களை வாங்குவதற்காக அமேதிக்கு சென்று தொழுகை நடத்தும், காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா, அதே சமயம் ம.பி.,யில் மகாகாலேஸ்வர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபடுவதாக மத்திய அமைச்சரும், அமேதி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.



latest tamil news




பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், அமேதியில் காங்கிரஸ் கடும் பதற்றத்தில் உள்ளது. அதனால் தான் அதன் பொதுச் செயலாளர் அங்கு சென்று தொழுகை நடத்துகிறார், ஓட்டுக்களை பெறுவதற்காக. தற்போது ம.பி.,யில் உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலுக்கும் அவர் சென்று, வழிபாடு நடத்தி உள்ளார் என்றார்.


latest tamil news




தொடர்ந்து காங்., தலைவர் ராகுல் குறித்து பேசிய ஸ்மிருதி, ம.பி., சட்டசபை தேர்தலுக்கு முன், விவசாயிகளின் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக ராகுல் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அங்கு அவர்கள் கட்சி ஆட்சிக்கு வந்த உடன் துரோகம் செய்து விட்டார். தற்போது, தன்னிடம் மந்திரக்கோல் ஏதும் இல்லை என்கிறார். இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.

அதே சமயம் ராகுலோ, தான் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் ம.பி, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு, வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறி வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - chennai,இந்தியா
18-மே-201903:30:30 IST Report Abuse
raja சின்னத்திரை நடிப்புக்கு மீண்டும் கூப்பிட மாட்டாங்க உன்னை... உன் வேலை முடிந்தது அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிங்க... காங்கிரஸ் பத்தி யோசிச்சே நீங்க ஐந்து வருடம் வீனா போச்சு பிஜேபி எப்பவும் வேஸ்டு தான்
Rate this:
19-மே-201918:23:27 IST Report Abuse
என் மேல கை வெச்சா காலிகாங்கிரஸ் ஒரு செத்து போற கட்சி....
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
17-மே-201917:00:40 IST Report Abuse
Nagarajan D திருமதி ஸ்மிர்தி அவர்களே அந்த காந்தி குடும்பமே அரண்டு கிடக்கு நீங்க வேற காங்கிரஸ் அடிமைகளின் வயிற்றில் புளியை கரைக்காதீர்கள்
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
17-மே-201915:25:18 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X