ஆசாத் அந்தர் பல்டி : எதிர்க்கட்சிகள் குழப்பம்

Updated : மே 17, 2019 | Added : மே 17, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement

புதுடில்லி : பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற தகவலில் உண்மையில்லை என்று, ஏற்கனவே தான் கூறிய கருத்திலிருந்து அந்தர் பல்டி அடித்துள்ளார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்.



latest tamil news





அந்தர் பல்டி :


டில்லியில் பேட்டியளித்த ஆசாத் கூறுகையில், ''பிரதமர் பதவிக்கு, காங்கிரஸ் கட்சி உரிமை கோராது என யாரும் கூற முடியாது. பாரம்பரியமிக்க, பழமையான கட்சி காங்கிரஸ். 5 ஆண்டுகள் ஆட்சி செய்திட, அதற்கு ஒரு வாய்ப்பு வழங்கிட வேண்டியது அவசியம். இந்தியாவின் பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற தகவலில் சிறிதளவும் உண்மையில்லை,'' என்றார்.


சிம்லா பேட்டி :


முன்னதாக,சிம்லாவில் பேட்டி அளித்த குலாம் நபி ஆசாத், ''நரேந்திர மோடியால் இரண்டாவது முறையாக பிரதமர் பதவிக்கு வர முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு இந்தமுறை நிச்சயம் கூடுதல் இடங்கள் கிடைக்கும். அதை ஏற்று கருத்து ஒற்றுமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைத்தால் ஏற்றுக்கொள்வோம். கிடைக்காவிட்டாலும் அது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை என் கூறி இருந்தார்.

பிரதமர் பதவி யாருக்கு என்பதை பிரச்னை ஆக்க மாட்டோம். எங்கள் (காங்கிரஸ்) தலைமை இந்த விஷயத்தில் மிக, மிக தெளிவாக உள்ளது. மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒருமித்த கருத்துடன் யாரை பிரதமராக தேர்வு செய்தாலும் அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். பிரதமர் பதவிக்காக காங்கிரஸ் விடாப்பிடியாக உரிமை கோராது என கூறி இருந்தார்.


latest tamil news





குழப்பம் :


காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை வரும் மே 23 அன்று டில்லியில் கூட்டியிருக்கிறார். பா.ஜ., அல்லாத ஆட்சிக்கு ஆதரவு என்று ஏற்கனவே காங்கிரஸ் அறிவித்ததால், உற்சாகத்தில் இருந்த மாநில கட்சிகள், தற்போது திடீரென காங்., தன் கருத்தை மாற்றிக்கொண்டதால் குழப்பம் அடைந்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
24-மே-201905:02:39 IST Report Abuse
meenakshisundaram abdulla மற்றும் ஆஜாத் ஒட்டுண்ணிகள் .நாட்டு வளத்தில் அனுபவிப்பவர்கள் காங்.இலிருந்து கொண்டு.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-மே-201904:03:38 IST Report Abuse
J.V. Iyer இவ்வளவு காலம் ஆட்சி செய்தும் கூரை மீதேறி கோழி பிடிக்காத காங்கிரஸுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் வேண்டுமாம். அரசியலில் குடும்ப ஆட்சியை கொண்டுவர நினைக்கும் சுடலை உட்பட எல்லோருக்கும் ஆப்பு வையுங்கள்.
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
18-மே-201906:38:08 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இந்த ஆளு ஒன்னம் நம்பர் பிராடுங்க இவன்தான் ராகுல்காந்திக்கு எழுதித்தறான் அதையும் தாப்புத்தப்பா பேசிண்டு நிக்குது ராவுளு தங்கச்சிக்கு கேக்கவே வேண்டாம் தான் ரொம்பவே படிச்சுட்ட மேதாவின்னு எண்ணம் இவர்களை நம்பி சொத்து சேர்த்த சோனியா ஒரு உலகமகா பிராடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X