அரசியல் தாகம் அடங்காது: பிரியங்கா

Updated : மே 17, 2019 | Added : மே 17, 2019 | கருத்துகள் (48)
Share
Advertisement
காங்கிரஸ், பிரியங்கா, ராகுல், பா.ஜ., ராஜிவ், பிரதமர்

புதுடில்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், இனிமேல் அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்பதை பிரியங்கா தெளிவுபடுத்தி விட்டார்.

தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்த நிலையில் பஞ்சாப்பில் இருந்து வெளியாகும் ‛‛தி டிரிபியூன்'' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பிரியங்கா கூறியதாவது: காங்.,கின் பொதுச்செயலாளர் என்ற முறையில் ராகுலின் தலைமையில் இனிமேல் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை செய்வேன். குடும்பத்தையும் அரசியலையும் சமாளிப்பதில் இனிமேல் எனக்கு சிரமம் இல்லை. நான் அரசியலில் இருப்பதையே என் குழந்தைகளும் தனிப்பட்ட முறையில் விரும்புகின்றனர். சமையல், வீட்டு வேலை என்று எனது அரசியல் திறமையை நான் வீணடிப்பதாக என் மகன் என்னை கிண்டல் செய்வது உண்டு.


latest tamil news




கடந்த சில மாதங்களாக அவர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கின்றனர்.என் மகன் தற்போது வெளிநாட்டில் படித்துக்கொண்டு இருந்தாலும், இங்கு நடப்பதை அடிக்கடி கேட்டு தெரிந்துகொள்வான். அது பற்றி மெசேஜ்களை அனுப்பிக்கொண்டே இருப்பான். என் மகள் தான் என்னுடனேயே எப்போதும் இருப்பார். இப்போது அரசியலில் நான் பிசியாக இருப்பதால், அவரது வாழ்க்கையில் நிறைய மாற்றத்தை உணர்கிறார். அவரும் எனக்கு ஒரு பலம் தான்.எனக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் எனது பிள்ளைகளுடன் தான் செலவழிப்பேன். அதனால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.


latest tamil news


Advertisement




கோழை இல்லை


தீவிர அரசியலுக்கு வராவிட்டால் என்னை ஒரு கோழை என்று நினைத்துவிடுவார்கள். எனது வாழ்வை நான் எப்படி புரிந்துகொண்டு இருக்கிறேன், அதற்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு என்பதை அறிந்துகொண்டேன்.திறமை இருந்தும், என்னால் ஏதாவது நல்லது செய்ய முடியும் என்று தெரிந்தும், நான் சும்மா இருக்கக் கூடாது. ஒவ்வொரு ஜனநாயக அமைப்பும் தாக்குதலுக்கு உள்ளாகும்போது, நமது அரசியல் சாசனம் திருத்தப்படும்போது நான் சும்மா இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் நான் ஒரு கோழை. ஒரு கோழையாக வாழ நான் விரும்பவில்லை.நான் ஒரு சாதாரண மனுஷி. மற்றவர்களைப் போலத் தான் நானும் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் கற்பிக்க விரும்புகிறேன்.


latest tamil news




எனது சகோதரர் ராகுல் ஒரு ஆன்மிகவாதி போன்றவர். அவரை பா.ஜ., தனிப்பட்ட முறையில் தாக்குகிறது. நமது நாடு, அதன் மதங்கள், அதன் அரசியல், அதன் அதிகாரம் போன்றவற்றை ராகுல் நன்கு புரிந்துள்ளார்.அவருக்கு அகங்காரமோ, தான் என்ற எண்ணமோ கிடையாது.2013ல் ஜெய்ப்பூரில் ராகுல் பேசியது பற்றி பலர் கிண்டல் செய்தனர். அவர் அன்று, தனக்கு அதிகார ஆசை கிடையாது என்று தான் பேசினார். உடனே, அவருக்கு பதவி ஆசை இல்லாமலா இருக்கும் என்று கேள்வி கேட்கின்றனர்.இதனால் உண்மையில் அவர் என்ன சொல்ல வந்தார் என்பதையே பலர் புரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. அவருக்குள் பதவி ஆசை இல்லை. வெளியே இருந்து தான் அதிகாரம் அவரை தேடி வருகிறது. இதில் ராகுல் தெளிவாக இருக்கிறார். இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கும் இவ்வளவு தெளிவான சிந்தனை கிடையாது.


latest tamil news





பெண்களுக்கு வாய்ப்பு தேவை


இந்திய அரசியலில் பெண்கள் போதிய அளவு பங்கு பெறவில்லை. இந்த நிலை மாற வேண்டும். இந்திய போர்க்கப்பலில் எங்கள் அப்பா ராஜிவ் விடுமுறையை கழித்தார் என்று எழுந்த சர்ச்சையைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனது தந்தையைப் பற்றி பிரதமர் மோடி என்ன நினைக்கிறார் என்று கவலைப்படும் கடைசி ஆளாக நான் இருப்பேன். இந்த பிரச்னை தேவையே இல்லாதது. என் தந்தையை பிரதமர் சந்தித்ததே இல்லை. என் தந்தையைப் பற்றி எனக்கு தெரியும். அப்படி இருக்க, என் தந்தையைப் பற்றி பிரதமரோ மற்றவர்களோ சொல்வது எனக்கு சம்மந்தம் இல்லாத விஷயம். இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
23-மே-201917:31:56 IST Report Abuse
tamilvanan இவர் பெயர் பிரியங்கா வதேரா. அப்படி தான் கையெழுத்து இடுகிறார். ஆனால் தேர்தல் பிட்ச்சாரத்தில் மட்டும் பெயரை ப்ரியங்கா காந்தி என்று கூறி கொள்ளுகிறார். இதன் மூலம் காந்தி பெயரை மக்கள் மனதில் பதிய வைக்கிறார். இது வடி கட்டிய பொய். இவருக்கும் காந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவரின் தாத்தா பிரோஸ் Ghandy என்னும் தனது பார்சி பெயரை மாற்றி காந்தி என்று வைத்து கொண்டார். இந்த களவாணி பெயர் மாற்றத்தை சட்டம் அனுமதிக்க கூடாது.
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
18-மே-201906:36:41 IST Report Abuse
Nathan கான் தாதா வம்சம் ஹிந்து ஏமாற்று பெயரில் இங்கே புடவையும் கட்டி, இந்தியாவை ஏமாற்றி இத்தாலியில் சொத்து குவிக்க என்ன கத்து கத்துது .
Rate this:
Cancel
Swaminathan Krishnaswami - Chennai,இந்தியா
18-மே-201906:07:42 IST Report Abuse
Swaminathan Krishnaswami துட்டு அங்கதான இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X