மோடியை அம்பலப்படுத்தினோம் - ராகுல் | Dinamalar

மோடியை அம்பலப்படுத்தினோம் - ராகுல்

Updated : மே 17, 2019 | Added : மே 17, 2019 | கருத்துகள் (84)
Share

புதுடில்லி: இந்திய லோக்சபா தேர்தல் பிரசார நிறைவடந்ததை ஒட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் அளித்த பேட்டியில், பிரதமர் மோடியை அம்பலப்படுத்தி அவர் பொய் பேசியதை நிரூபித்தோம் என்று கூறியுள்ளார்.latest tamil news
பாராட்டுகிறேன் :


காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று ராகுல் பேசுகையில், '' மோடி நேர்மையானவர் அல்ல. அவர் 15 லட்சம் தருவதாக பொய் கூறியதை நிரூபித்தோம். தேர்தல் முடியும் நேரத்திலாவது மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பதை நான் பாராட்டுகிறேன்.


எதிர்க்கட்சி :


ஒரு எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கடமையை நிறைவேற்றியது. மோடியின் வசதிக்காகவே தேர்தல் கமிஷன் 7 கட்டத் தேர்தல்களை நடத்தியது. ஒரு தலைபட்சமாகவே செயல்பட்டது. மோடி என்ன பேசினாலும் கண்டுகெள்ளவில்லை.


latest tamil news
பணமும் உண்மையும் :


மோடியும், அமித்ஷாவும் ஏராளமான பணத்துடன் பிரசாரம் செய்தனர். பா.ஜ.,வின் பணத்திற்கும் எங்களது உண்மைக்கும் இடையில் தான் இந்தப் போட்டி. மோடி என் குடும்பத்தை விமர்சித்தார். நான் அதற்காக கவலைப்படவில்லை. நான் அவரது பெற்றோரை மதிக்கிறேன். நான் அவர்களை விமர்சிக்க மாட்டேன்.


சோனியா, மன்மோகன் :


ரபேல் விவகாரம் குறித்து பலமுறை அழைத்தும் மோடி என்னுடன் விவாதிக்கவில்லை. எனவே, அவர் நேர்மையானவர் அல்ல என்பதை அம்பலப்படுத்தினோம். தேர்தல் கமிஷன் செயல்பாடுகளை மக்கள் கவனித்தே வந்தார்கள். மக்களது விருப்பமே, எங்களது முடிவாக இருக்கும். சோனியா, மன்மோகனின் அனுபவம் எனக்கு உதவும்,'' என்றார்.
மேலும், ஆட்சியமைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல், மக்களின் தீர்ப்பை பொறுத்து நல்ல முடிவை எடுப்போம், என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X