அறிவியல் ஆயிரம்| Dinamalar

அறிவியல் ஆயிரம்

Added : மே 17, 2019
Share
அறிவியல் ஆயிரம்நீர்நாய்கள்நீர்நாய் என்பது நீரில் வாழ தன்னை ஓரளவு தகவமைத்து கொண்ட ஒருவகைப் பாலுாட்டி விலங்கு. மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களுடன் நீர்நாய்களை அழைத்து செல்கின்றனர். படகுகளுடன் கட்டப்பட்டு இருக்கும் இந்த நீர்நாய்கள் ஆற்றுக்குள் சென்று மீன்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவற்றை மேலே அனுப்புகின்றன.

அறிவியல் ஆயிரம்

நீர்நாய்கள்

நீர்நாய் என்பது நீரில் வாழ தன்னை ஓரளவு தகவமைத்து கொண்ட ஒருவகைப் பாலுாட்டி விலங்கு. மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களுடன் நீர்நாய்களை அழைத்து செல்கின்றனர். படகுகளுடன் கட்டப்பட்டு இருக்கும் இந்த நீர்நாய்கள் ஆற்றுக்குள் சென்று மீன்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவற்றை மேலே அனுப்புகின்றன. வலைகளுடன் காத்திருக்கும் மீனவர்கள் எளிதாக மீன்பிடிக்க இவை உதவுகின்றன. இவை மீன்களை ஆர்வமாக தேடும் என்பதால் மீன்பிடித்தலின் போது அவைகளுக்கு உணவு அளிக்கப்படுவது இல்லை.

தகவல் சுரங்கம்

உலகின் பெரிய மரம்

மரங்கள்தான் நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை தருகின்றன. பல்வேறு வகை மரங்கள் உள்ளன. இதில் அமெரிக்காவில் உள்ள 'ஜியன்ட் செகோயா' மரம், உலகின் மிகப்பெரியது. கலிபோர்னியாவின் செகோயா தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இதன் சுற்றளவு 52,500 கனஅடி. 2,000 ஆண்டுகள் வயதானது. இம்மரம் தன் பெரிய கிளைகளில் ஒன்றை, கடந்த 2006ம் ஆண்டில் இழந்தது. இதன் உயரம் 274.9 அடி. ஆனால் உலகின் மிக உயரமான மரம் இது கிடையாது. அப்பெருமையை கலிபோர்னியாவில் உள்ள 'ரெட்வுட்' மரம் பெற்றுள்ளது. இதன் உயரம் 298 அடி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X