சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 17, 2019
Advertisement
  'டவுட்' தனபாலு

காங்., மூத்த தலைவர், குலாம்நபி ஆசாத்: மத்தியில், பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கக் கூடாது என்பது தான், எங்கள் கட்சியின் ஒரே நோக்கம். பிரதமர் பதவி பற்றி கவலைப்படவில்லை.

டவுட் தனபாலு: மீசைல மண்ணு ஒட்டலைன்னு, சும்மா சுத்தி வளைக்காதீங்க... 'காங்கிரசால், பிரதமர் நாற்காலியில் அமர முடியாது என்பதை நன்கு உணர்ந்து இருக்கோம்; அதனால், பிற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கத் தயாராகிட்டோம்'னு, வெளிப்படையாக சொல்லுங்க... இதற்கு ஏன் இவ்வளவு கூச்சம் என்பது தான், மக்களின், 'டவுட்!'

தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: அரவக்குறிச்சி தொகுதியில், வீட்டுமனை இல்லாத, 25 ஆயிரம் பேருக்கு, தலா, 3 சென்ட் நிலம் வழங்கப்படும் என, செந்தில் பாலாஜி அறிவித்துள்ள திட்டம், தொலைநோக்கு பார்வையுடையது.
டவுட் தனபாலு: 'எங்களுக்கே தோன்றாத சிந்தனை எல்லாம், அரவக்குறிச்சி வேட்பாளருக்கு தோன்றியிருக்கு'ன்னு சொல்லுங்க... சம்பந்தப்பட்ட தொகுதி வேட்பாளர்களே, தனக்குத் தோன்றிய வாக்குறுதிகளை அளித்து விட்டால், எதிர்காலத்தில், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கைக்கே வேலை இல்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!


பகுஜன் சமாஜ் கட்சி தலைவர், மாயாவதி: காங்., ஆட்சிக்கு வந்தால், ஏழை குடும்பங்களுக்கு, மாதந்தோறும், 6,000 ரூபாய் வழங்குவதாக, அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தால், வறுமையை ஒழித்து விட முடியுமா... வறுமையை ஒழிக்க, காங்கிரசிடம், வேறு நல்ல திட்டம் இல்லையா?
டவுட் தனபாலு: தொலைநோக்கு பார்வை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சுட்டீங்க போல... ஏன் இந்த, 'டவுட்'னா, 'உ.பி.,யில் நீங்க முதல்வராக இருந்த போது, அரசுப் பணத்தில் எதற்காக, உங்க கட்சி சின்னமா யானை சிலைகளை, மாநிலம் முழுக்க நிறுவினீங்க'ன்னு கேட்டதற்கு, இதன் மூலம், சுற்றுலா பெருகும்; அரசின் வருவாய் உயரும்னு வியாக்கியானம் பேசினீங்களே... இது மட்டும் நம்பும்படியாகவா இருக்கு என்ற, 'டவுட்'டை எழுப்பிடப் போறாங்க...!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X