பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கறுப்பு பணம் பதுக்கியோர் யார்?
தகவல் தர மத்திய அரசு மறுப்பு

புதுடில்லி: சுவிட்சர்லாந்து நாட்டில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்களின் விபரத்தை வெளியிட, மத்திய அரசு மறுத்து விட்டது. பி.டி.ஐ., எனப்படும், 'பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா' நிறுவனத்தின் செய்தியாளர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து பெறப்பட்ட, கறுப்பு பணம் பதுக்கியுள்ளோர் பட்டியலை கேட்டிருந்தார்.

 கறுப்பு பணம், பதுக்கியோர் ,யார்?, தகவல்,  மத்திய அரசு, மறுப்பு


இந்த மனுவுக்கு, மத்திய நிதி அமைச்சகம் அனுப்பியுள்ள பதிலில் கூறப்பட்டு உள்ளதாவது: கறுப்பு பண பதுக்கல் மற்றும்

வரி ஏய்ப்பு செய்தோர் விபரம் தொடர்பாக, 2016, நவ., 22ல், இந்தியா - சுவிட்சர்லாந்து அரசுகளுக்கு இடையே, தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுஉள்ளது.


நடவடிக்கைவரி ஏய்ப்பு மற்றும் கறுப்பு பண பதுக்கல் தொடர்பான வழக்குகளுக்கே, அந்ததகவல் பயன்படுத்தப்படுகிறது. அதனால், அந்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.பெறப்பட்ட தகவல் அடிப்படையில், தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.கணக்கில் வராத பணத்தை கண்டுபிடிக்க, இரு நாடுகளுக்குமே இந்த தகவல் பரிமாற்றம் மிகுந்த உதவியாக இருக்கும். எனவே,சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து பெறப் பட்ட தகவல்களை அளிக்க முடியாது.


சுவிட்சர்லாந்து மட்டுமின்றி, பிரான்ஸ் உள்ளிட்ட மற்ற நாடுகளிலும், கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்தும் தகவல்கள் பெறப்பட்டு உள்ளன.பிரான்சில் இருந்து பெறப்பட்ட தகவல்

Advertisement

அடிப்படையில், ஹெச்.எஸ்.பி.சி., வங்கியில், இந்தியர்கள் முதலீடு செய்திருந்த, கணக்கில் வராத, ரூ.8,465 கோடிகண்டுபிடிக்கப்பட்டது.


அபராதம்



அது தொடர்பாக, 427 வழக்குகள் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன. அதில், 162 வழக்குகளில், வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.1,291 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மே-201915:14:51 IST Report Abuse

ஆப்புஅரசியல் ஆதாயம் இருக்கும்னா எதை வேணும்னாலும் வெளியே வுடுவாங்க. எனக்குத் தெரிஞ்சு பெரிய அரசியல் தலைகள் யாரும் மாட்டலே. கருப்புப் பணமாவது, சிவப்பு பணமாவது. கப்ஸா.

Rate this:
18-மே-201915:11:12 IST Report Abuse

ஆப்புஅதெல்லாம் ஒன்று கண்டுபிடிக்க முடியாது. சுவிஸ் வங்கிகளிலிருந்து பணத்தை வேற எங்காவது மாத்திக் கொண்டு விட்டார்கள். இல்லே இந்தியக் குடியுரிமையை மாத்திக் கொண்டிருப்பார்கள்.

Rate this:
M.SHANMUGA SUNDARAM - TUTICORIN,இந்தியா
18-மே-201914:33:15 IST Report Abuse

M.SHANMUGA SUNDARAMநேர்மையான அரசு ஊழல் அற்ற அரசு கருப்பு பணத்தை ஒழிக்கும் அரசு பெயரை எல்லாம் வெளியிடாது .

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-மே-201916:02:56 IST Report Abuse

தமிழ்வேல் திருட்டுப்பயலுவோ பெயரை காப்பாற்றும் அரசு. ...

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X