பதிவு செய்த நாள் :
ராகுல் தெரிவித்தது பொய் தகவல்:
'ஆக்ஸ்போர்டு' அகராதி விளக்கம்

புதுடில்லி, :'காங்கிரஸ் தலைவர், ராகுல் பதிவிட்டிருந்தது போல், 'மோடிலை' என்ற வார்த்தையே, எங்கள் அகராதியில் இடம் பெறவில்லை; அவர் பதிவிட்டிருந்த புகைப் படமும் போலியானது' என, ஆக்ஸ்போர்டு அகராதி நிறுவனம் தெரிவித்துள்ளது; இது, ராகுலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல், பொய் தகவல்,ஆக்ஸ்போர்டு, அகராதி, விளக்கம்


காங்., தலைவர் ராகுல், தேர்தல் பிரசாரங்களில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார். பிரதமர் மோடி, தொடர்ச்சியாக உண்மைக்குமாறான தகவல்களை பேசி வருவதாக கூறி, இதற்காக, 'மோடியின் பொய்' என்று பொருள்படும் வகையிலான, 'மோடிலை' என்ற, புதிய ஆங்கில வார்த்தையையும், அவர் பயன்படுத்தினார்.


இது, அகராதியில் இடம் பெற்றிருப்பதாகவும்,

'இந்த வார்த்தைக்கு, மோடியை போல்தொடர்ந்து பொய் தகவல்களை பேசுவது என அர்த்தம்' என்றும், ராகுல் தெரிவித்திருந்தார்.

அது தொடர்பாக, ஆக்ஸ்போர்டு அகராதியின் பக்கத்தின், போலி படத்தையும், சமூக வலைதளமான, 'டுவிட்டரில்'பகிர்ந்தார்.இந்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ., தலைவர்கள், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். நாடு முழுவதும், இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.


இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு அகராதி நிறுவனம், தாமாக முன்வந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:ராகுல் தெரிவித்துள்ளது போல், மோடிலை என்ற வார்த்தையே, எங்கள் அகராதியில் இடம் பெறவில்லை; அவர் பதிவிட்டிருந்த புகைப்படமும் போலியானது. இதை, யாரும் நம்ப வேண்டாம்.இவ்வாறு, அதில்கூறப்பட்டுள்ளது.


ஏற்கனவே, பிரதமர் மோடி பற்றி, உச்ச நீதிமன்றம் கூறியதாக, பொய்யான ஒரு கருத்தை தெரிவித்து, அதற்காக, ராகுல் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில், ஆக்ஸ்போர்டு அகராதி

Advertisement

விஷயத்திலும், அவர் தெரிவித்த கருத்து பொய் என தெரியவந்துள்ளது.

ஆக்ஸ்போர்டு அகராதி விவகாரம் தொடர்பாக, மத்திய திறன் மேம்பாட்டு துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, அனந்த குமார் ஹெக்டே, ராகுலை கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

அதில், 'ராகுல், தன்னை, சர்வதேச முட்டாள் என்பதை நிரூபித்து விட் டார்' என, கூறி இருந்தார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யது. இதையடுத்து, இரண்டு நாட்களாக, தன் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக, ஹெக்டே தெரிவித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (25+ 60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkataraman Sekkar - Trivandrum,இந்தியா
18-மே-201922:58:42 IST Report Abuse

Venkataraman Sekkarஎந்த தைரியத்தில் இவர் இப்படி பொய் மேல் பொய்யாக அடுக்கிக்கொண்டு போகிறார்.

Rate this:
ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா
18-மே-201919:52:46 IST Report Abuse

ஊழல் விஞ்ஞானி ராகுல் வின்சி ஒரு கிருத்துவ மத போதகர்......எனவே இவரிடம் எப்படி நீதி மற்றும் நேர்மையை எதிர்பார்க்க முடியும்.......

Rate this:
senthil - Pasumbalur,இந்தியா
18-மே-201919:46:19 IST Report Abuse

senthilஇந்த கருத்துக்களில் புலப்படுவது ராகுல் ஒரு திறமை இல்லாதவர். இது புதிதான கருத்தல்ல. யாரும் நான் சொல்லுவது பெரிதுபடுத்த வேண்டாம். அனைவருக்கும் தெரிந்தது . மக்கள் தேர்ந்தெடுப்பர் நல்ல தலைவரை என்று நம்புகிறோம். நாளுக்கு நாள் மக்களின் அறிவு வளர்ந்து வருகிறது என்பதில் ஐயமில்லை. நம் நாடு வளரும் என்பதிலும் ஐயமில்லை

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X