பதிவு செய்த நாள் :
நிறைவு!
இரண்டு மாத பிரசாரம் முடிவுக்கு வந்தது:
59 தொகுதிகளில் நாளை ஓட்டுப் பதிவு

புதுடில்லி:லோக்சபாவுக்கு, கடைசி மற்றும் ஏழாவது கட்டத்தில் தேர்தலை சந்திக்கும், எட்டு மாநிலங்களை சேர்ந்த, 59 தொகுதிகளில், நேற்றுடன் பிரசாரம் முடிந்தது. இந்த, 59 தொகுதிகளில், நாளை தேர்தல் நடக்கிறது. வரும், 23ல்,தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.


லோக்சபாவுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்., 10ல், இந்த அறிவிப்பு வெளியானது.கடந்த மாதம், 11ம் தேதி நடந்த முதல் கட்டத் தேர்தலில், 69 சதவீத ஓட்டுப் பதிவானது.



தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள, 95 தொகுதிகளுக்கு, 18ம் தேதி நடந்த இரண்டாவது கட்டத்தில், 69 சதவீத ஓட்டுகள் பதிவாகின. வாக்காளருக்கு பணம் தர முயன்றதாக, தமிழகத்தின் வேலுார் தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.மூன்றாம் கட்டத்தில், 68; நான்காம் கட்டத்தில், 65; ஐந்தாம் கட்டத்தில், 62; ஆறாம் கட்டத்தில், 63 சதவீத ஓட்டுகள் பதிவாகின.


ஓட்டு சேகரிப்பு


இந்நிலையில், மீதமுள்ள, 59 தொகுதிகளில், நாளை நடக்கும் ஏழாம் கட்டத் தேர்தலில், ஓட்டுப் பதிவு நடக்க உள்ளது.இதற்கான, பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று, அனைத்து கட்சிகளும், தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டன.

பா.ஜ., சார்பில், பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் சார்பில், கட்சி தலைவர் ராகுல், அவரது சகோதரியும், கட்சி

பொதுச்செயலருமான, பிரியங்கா, முன்னாள் மத்திய அமைச்சர்களும் பிரசாரம் செய்தனர்.


பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி, சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் யாதவ் ஆகியோர், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, உத்தரபிரதேசத் தில் பிரசாரம் செய்தனர்.மேற்கு வங்கத்தில் உள்ள, ஒன்பது தொகுதிகளுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவதாக இருந்தது. ஆனால், கோல்கட்டாவில் நடந்த வன்முறையால், நேற்று முன்தினம் இரவுடன், அங்கு பிரசாரம் முடிந்தது.


பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசத்தில், தலா 13; மேற்கு வங்கத்தில், ஒன்பது; மத்திய பிரதேசம் மற்றும் பீஹாரில், தலா, எட்டு; ஹிமாச்சல பிரதேசத்தில், நான்கு; ஜார்க்கண்டில், மூன்று;
சண்டிகரில், ஒரு தொகுதி என, 59 தொகுதிகள், இறுதி மற்றும் ஏழாம் கட்டத்தில் தேர்தலை சந்திக்க உள்ளன.



தீவிர பிரசாரம்


வரும், 23ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்தத் தேர்தலையொட்டி, கடந்த இரண்டு மாதங்களாக, அரசியல் கட்சிகள், நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்றுடன், இந்தப் பிரசாரம் ஓய்வுக்கு வந்து உள்ளது.



மீண்டும் பா.ஜ., ஆட்சி பிரதமர் நம்பிக்கை



லோக்சபா தேர்தல் பிரசாரம், நேற்றுடன் முடி வடைந்த நிலையில், டில்லியில் உள்ள, பா.ஜ., தலைமையகத்தில், கட்சி தலைவர் அமித் ஷா, நேற்று பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில், கடந்த ஐந்தாண்டு களில் முதல் முறையாக, அதிக பத்திரிகையாளர்கள்

Advertisement

பங்கேற்கும் சந்திப்பில், பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார்.


அப்போது, பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த மோடி, ''இந்த சந்திப்பு, கட்சி தலைவர் அமித் ஷாவுக்கானது; பத்திரிகையாளர் கேள்விக்கு, அவரே பதில் அளிப்பார். இந்த விஷயத்தில், கட்சி கட்டுப் பாட்டை மீற விரும்பவில்லை,'' என்றார்.பின், அவர் கூறியதாவது: கடந்த ஐந்தாணடு களில், பா.ஜ., தலைமையிலான அரசு, மிகச் சிறப்பாக ஆட்சி செய்துள்ளது; பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த தேர்தலிலும், பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். நாங்கள் அளித்த வாக்குறுதிகளை எல்லாம், ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம்.



நம் நாடு, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பது, பெருமையான விஷயம். மக்கள், எப்போதும் எங்களுக்கு ஆதரவாக இருப்பர்.இவ்வாறு, அவர் கூறினார்.தேர்தல் பிரசாரம், கடந்த ஐந்தாண்டுகளில், பா.ஜ., சார்பில் நிறைவேற்றபட்ட திட்டங்கள் தொடர்பான பத்திரிகையாளர் கள் கேள்விக்கு, அமித் ஷா பதில் அளித்தார்.



எதிர்க்கட்சிகளின் ஆட்சிராகுல் எதிர்பார்ப்பு


பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித் ஷாவும், பத்திரிகையாளர்களைசந்தித்த அதே நேரத்தில், டில்லியில், காங்கிரஸ் தலைவர், ராகுலும், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:பிரதமர் மோடி, முதல் முறையாகபத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.



இப்போதாவது அவர், பத்திரிகையாளர்களை சந்தித்தது, நல்ல விஷயம் தான். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள், கண்டிப்பாக, பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்காது. எனவே, அனைத்து எதிர்க்கட்சி களையும் ஒருங்கிணைத்து, ஆட்சி அமைப்போம். தேர்தல் முடிவுகள் வெளியான பின், எந்த மாதிரியான திட்டங்களை செயல் படுத்துவோம் என்பதை, வெளிப்படையாக கூற விரும்பவில்லை.


மன்மோகன் சிங், சோனியா போன்ற மூத்த தலைவர்களின் ஆலோசனையின்படி செயல் படுவோம். மோடிக்கு, நாட்டு மக்கள், நல்ல வாய்ப்பு அளித்தனர். ஆனால், அதை அவர் பயன்படுத்த தவறி விட்டார்.மோடி தலைமை யில், மீண்டும் ஆட்சி அமைவதற்கான, 90 சத வீத வாய்ப்புகளை, நாங்கள் சிதறடித்து விட் டோம்.அவருக்கு இருந்த,10 சதவீத வாய்ப்பு களையும்,எதிர்க்கட்சிகளை விமர்சித்து, அவரே சிதறடித்து விட்டார்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
18-மே-201905:05:06 IST Report Abuse

blocked userமோடி மீண்டும் பிரதமராவது காலத்தின் கட்டாயம். மக்கள் உறுதியாக பொய் சொல்லித்திரியும் எதிரிகள் அணியை ஒருபொழுதும் நம்பப்போவது இல்லை.. காங்கிரஸ் 44 விட குறைவாக வாங்கி சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.. 44 ஐ விட குறைவாக வெற்றி பெற்றால் அணியாய் போன்ற திட்டங்கள் வர வாய்ப்புக்கம்மி.. முக காலத்திலேயே 0 என்ற அளவில் இருந்த திமுக அதை விட ஒன்று அல்லது இரண்டு வாங்கும் அளவில் இருந்தால் நாட்டுக்கு நல்லது.. மமதாவுக்கும் ஆப்பு உறுதி என்றே சொல்லுகிறார்கள்..

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X