பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'இந்திய மாணவர்களிடம் அதிக திறமை!'
'இஸ்ரோ' தலைவர், கே.சிவன் பேச்சு

சென்னை: ''இந்திய மாணவர்களிடம், அளப்பரிய ஆர்வமும், திறமையும் குவிந்துள்ளது; அவற்றை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர், கே.சிவன் தெரிவித்தார்.

இந்திய மாணவர், அதிக திறமை, இஸ்ரோ தலைவர், கே.சிவன்


நாட்டின் தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, இஸ்ரோ நிறுவனம், பி.எஸ். எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இந் நிறுவனம், பள்ளி மாணவர்களை, 'யுவிகா' எனப்படும், இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டத்தை துவக்கியுள்ளது.அத்திட்டத்தின் கீழ், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து, தலா, மூன்று மாணவர்கள் என, மொத்தம், 108 பேரை தேர்வு செய்து, இரு வாரங்களுக்கு, பயிற்சி வழங்க உள்ளது.இதன் துவக்க விழா, கர்நாடக மாநிலம், பெங்களூரில், 13ம் தேதி துவங்கியது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம்; குஜராத், ஆமதாபாத்; கர்நாடகா, பெங்களூரு; மேகாலயா, ஷில்லாங்; ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களில் உள்ள, இஸ்ரோ மையங்களில், மாணவர்களுக்கு,பயிற்சி வழங்கப்பட உள்ளது.


பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பதக்கங்கள் வழங்கப்பட்டன.


இதில், சிவன் பேசியதாவது:சூரியனை ஆய்வு செய்ய, 'ஆதித்யா எல் - 1' என்ற விண்கலம், 2020ல், விண்ணில் ஏவப்படும். புவியில் இருந்து, 15 லட்சம் கி.மீ.,யில் சூரியன் உள்ளது.அதில், ஆதித்யா விண்கலத்தை, 1.50 லட்சம் கி.மீ.,யில், நிலை நிறுத்தி, சூரியனின் வெளிப் பகுதி ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.இது, பருவநிலை ஆய்வுக்கு உதவும்.செவ்வாய் கிரகம், புவிக்கு அருகில் உள்ளது. புவியை போல் வடிவம் உள்ளிட்டவை காணப்படுவதுடன், அங்கு, தண்ணீர்இருப்பதற்கான சாத்தியக்கூறும் கண்டறிய பட்டு உள்ளது.


இதனால், மற்ற நாடுகளை போல், இஸ்ரோவும், செவ்வாய் கிரகத்திற்கு, செயற்கைக்கோள் அனுப்பும் பணியை முடுக்கி விட்டுள்ளது. இந்திய

Advertisement

மாணவர்களிடம், அளப்பரிய ஆர்வமும், திறமையும் குவிந்துள்ளது. அவற்றை வெளிப்படுத்த, இஸ்ரோ, நடவடிக்கை எடுக்கும். ஆண்டு தோறும், மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப் படும். இளம் விஞ்ஞானிகள் ஆதரவுடன், விண்வெளியில், இஸ்ரோ சார்பில், ஆய்வு மையம் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.


சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆதித்யா, நெல்லையைச் சேர்ந்த ஷமிரா, திருச்சியைச் சேர்ந்த நித்யராஜ் ஆகிய மூன்று மாணவர்கள், 'யுவிகா' திட்டத்திற்கு தேர்வாகி உள்ளனர்.அவர்கள் கூறுகையில், 'பயிற்சிக்கு தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது; ராக்கெட் ஏவுதல், செயற்கைக்கோள் பயன்பாடு குறித்த தகவல்களை கேட்கும் போது, வியப்பை ஏற்படுத்துகின்றன; இஸ்ரோவில், விஞ்ஞானி களாக பணிபுரிய ஆர்வத்தை துாண்டுகின்றன' என்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
18-மே-201907:57:22 IST Report Abuse

Manianஆனால் இதிலும் கொள்ளை அடிக்க புதிய வழிகளை கண்டுபிடிப்பார்கள் என்பது வேதனை தருகிரதே. தனி மனிதனின் நாள் ஒழுக்கம் வந்தால் ஒழிய ஓட்டை வாளி பாக்கெட் போல இது ஆகிவிடும். என்றுமே இன்தட்டில் தீமைக்கு குறைவில்லை. அதை வர விடுவதில்லை என்பதே உண்மை. ஆனால் இதை ஒப்புக்கொளளும் மன பக்குவம் முதலில் வந்தால், மற்ற சீர்திருத்தன்ங்கள் வரும்.சாரி சொல்லும் பழக்கம் இன்னும் பரவவில்லை.

Rate this:
blocked user - blocked,மயோட்
18-மே-201906:48:42 IST Report Abuse

blocked userமாணவர்களை ஊக்குவிப்பது பாராட்டத்தக்க விஷயம்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X